இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், அணியின் செயல்பாடு குறித்து நியூசிலாந்து கேப்டன் லாதம் பேசியிருக்கிறார்.
கடினமான சூழலில் வீரர்கள் காட்டிய மன உறுதியையும், ஆடுகளத்தின் தன்மையையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மைதானத்தில் நீண்ட நேரம் ஃபீல்டில் இருந்தபோதும் வீரர்களின் முயற்சியை அவர் பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து லாதம் பேசும்போது “சில வீரர்கள் முன்வந்து செயல்பட்ட விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக நாங்கள் நெருக்கடியான நிலையில் இருந்தபோது, முதல் இன்னிங்ஸில் வெவ்வேறு வீரர்கள் பொறுப்பேற்று ஆடியது அணியின் உண்மையான குணத்தைக் காட்டியது. பிட்ச் இவ்வளவு பிளாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, இது வழக்கமான பேசின் விக்கெட் போல இல்லை” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் தொடரும்போது “எவ்வளவு நேரம் ஃபீல்டில் இருந்தோம் என்பதைப் பொருட்படுத்தாமல் பவுண்டரி லைன் அருகே வீரர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதில் நிச்சயம் பெருமைப்படுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.