இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் 19 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியில் மொத்தம் நான்கு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். எனவே தோனி விளையாட முடியாவிட்டாலும் அது சிஎஸ்கே அணிக்கு எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
இப்போதைக்கு மகேந்திர சிங் தோனியை இம்பேக்ட் பிளேயராக விளையாட வைக்கும் திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் களம் இறங்கி விளையாட வேண்டிய தேவை இல்லை என்றால் யாராவது இந்திய பந்துவீச்சாளர்கள் அவருடைய இடத்தில் விளையாட வைக்கப்படலாம்.
அதே சமயத்தில் பயிற்சியில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட, சஞ்சு சாம்சன் அவுட்ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக தோனி விக்கெட் கீப்பராக 20 ஓவர்கள் களத்தில் நிற்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “தோனி விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அது மிகவும் தெளிவான தேர்வு. அவர் உடல் எடை அதிகரிக்கவில்லை. எனவே அவரால் வேகமாக ஓட முடியும். தற்போது அவர் விக்கெட் கீப்பிங் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும். எங்காவது காயம் ஏற்பட்டால் சஞ்சு சாம்சன் இருக்கிறார். எனவே தோனி இம்பேக்ட் பிளேயராக மட்டும் வரவே கூடாது”
இதையும் படிங்க: உங்க முட்டாள்தனமான வரவேற்பு எனக்கு வேணாம்.. பட்ட வரைக்கும் போதும் – பிஎஸ்எல் தொடரில் கில்லெஸ்பி சங்கட்டம்
“தோனி இந்த வயதிலும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வீரராக காணப்படுகிறார். அவரால் கடைசி மூன்று ஓவர்களுக்கு வந்து சில சிக்ஸர்கள் அடிக்க முடியும். ஆனால் அவர் 15 அல்லது 16வது ஓவர்களில் வந்து விளையாட மாட்டார்” என்று கூறி இருக்கிறார்.