தற்போது கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ரகானேவை தான் அணியிலிருந்து நீக்கி விடுவேன் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
அதே சமயத்தில் இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரகானே ரன் ஏதும் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அவர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா பேட்டிங் யூனிட்டில் ரகானே மற்றும் ரகுவன்சி இருவரும் ஒரே மாதிரியாக விளையாட கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும். தற்போது இருவருமே விளையாடுவது அந்த அணிக்கு பிரச்சினையை உண்டாக்கி உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “நான் ரகானேவுக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தருவேன். அதிலும் அவர் ஏதும் செய்யவில்லை என்றால் நான் அணியை விட்டு நீக்கி விடுவேன். ஐபிஎல் தொடரின் நடுப்பகுதியில் சுனில் நரைனை கேப்டனாக கொண்டு வருவேன். முதலில் அவரை கேப்டனாக நியமித்ததே தவறான முடிவு. இப்பொழுது அவரை நீக்கி தைரியமான முடிவு எடுப்பார்களா? என்று பார்க்க வேண்டும்”
“அந்த அணியின் பௌலிங் யூனிட்டில் வைபவ் அரோரா நான்கு ஓவர்கள் வீசினால் 55 ரன்கள் கொடுக்கிறார். இப்படிப்பட்டவரை ஸ்ட்ரைக் பவுலர் ஆக வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? ரிங்கு சிங் மேல் வரிசையில் வந்து விளையாட முடியாது. அவர் கீழ் வரிசையில் கடைசி மூன்று நான்கு ஓவர்களுக்கு 50 ரன்கள் வேண்டுமென்றாலும் எடுத்து தர முடியும்”
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் நான் பார்த்ததில் நீ சிறப்பான ஆள்.. இப்படி ஒரு கேட்ச்சை இதுவரை பார்த்ததில்லை – சச்சின் பாராட்டு
“இப்போது கொல்கத்தா அணியை எடுத்துக் கொண்டால் கார்த்திக் தியாகி மட்டுமே சிறப்பான முறையில் பந்து வீசி வருகிறார். அந்த அணியை பார்த்தால் அவர்களுடைய பயிற்சியாளர் குழுவில் இருப்பவர்களை கொண்டு வந்து ஆட விட்டாலே சிறப்பாக விளையாடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.