இந்திய தொடர்.. இலங்கை டி20 அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. அனுபவ வீரர்கள் நீக்கம்.. பழைய அதிரடி வீரர் சேர்ப்பு

0
917
Srilanka

இந்திய அணி தற்போது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. தற்போது முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு இலங்கை அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் முதல் சுற்றோடு மிகவும் மோசமாக தோற்று வெளியேறி வந்த காரணத்தினால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

- Advertisement -

எனவே இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டியதும், மேலும் இந்திய அணிக்கு தொடரில் சவால் கொடுக்கும் வகையில் வீரர்களை உள்ளே கொண்டு வருவதும், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு தருவதும் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு நிறைய நெருக்கடிகள் இருந்து வந்தது.

இந்த நிலையில் சற்று முன்பு முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. இந்த அணிக்கு இலங்கை அணியின் தற்போதைய மூத்த வீரர் சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டு இருக்கிறார். இவருடன் இன்னொரு அனுபவ வீரர் தனஞ்செய டி சில்வாவும் நீக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் இன்னொரு மூத்த வீரர் தினேஷ் சண்டிமால் திரும்ப இலங்கை டி20 அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா இடம் பெறவில்லை. காயத்தில் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் வேகபந்துவீச்சாளர்களாக சமீரா, பதிரணா மற்றும் நுவன் துஷாரா என சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

மேலும் சுழல் பந்துவீச்சுக்கு மதிஷா தீக்சனா, வனிந்து ஹசரங்கா மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் துவக்க ஆட்டக்காரர்கள் அதுவும் நிஷாங்கா, குஷால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ர்னாடோ ஆகியோரும், மிடில் வரிசையில் கமிந்து மெண்டிஸ், முன்னாள் கேப்டன் டசன் சனகா ஆகியோர் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : வேலையில்லை என்று சொன்ன டிராவிட்.. வந்த புது ஆஃபர்.. பழைய கோட்டைக்கு திரும்புவாரா? – வெளியான புதிய தகவல்கள்

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி :

சரித் அசலங்க (கே), பதும் நிஷாங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், டசன் சனகா, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மதிஷா தீக்சனா, சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ, சமீரா, பதிரனா மற்றும் நுவன் துசாரா.

- Advertisement -