இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியை வெல்வதற்கு தங்களால் முடியும் என சிஎஸ்கே அணிக்காக விளையாடும் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நாளை மறுநாள் இந்த தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது. இந்திய அணி புதிய பயிற்சியாளர் மற்றும் புதிய கேப்டன் உடன் இந்த தொடரை சந்திக்கிறது.
இதே போல இலங்கை அணிக்கும் புதிய கேப்டனாக சரித் அசலங்கா மற்றும் இடைக்கால பயிற்சியாளராக பணத் ஜெயசூர்யா ஆகியோர் வந்திருக்கிறார்கள். எனவே இரு அணிகளும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை அணி உள்நாட்டில் விளையாடுகின்ற காரணத்தினால் கொஞ்சம் நம்பிக்கைவுடனும் இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர்கள் குறித்து பேசி இருக்கும் மதிஷா பதிரனா இந்திய அணி புதிய பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடன் வருகின்ற காரணத்தினாலும், தங்களுக்கு ஒரு நல்ல அணி கிடைத்திருப்பதாலும், இந்த தொடரை வெல்வதற்கான சாத்தியங்கள் தங்களுக்கு அதிகம் இருப்பதாகப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மதிஷா பதிரனா கூறும்போது “இந்த தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா புதிய பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடன் வருகிறது. தற்போது அவர்களின் டீம் காம்பினேஷன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆனாலும் கூட அவர்கள் உலக சாம்பியன் என்கின்ற காரணத்தினால் எங்களுக்கு சவாலானதாகவே இருக்கும்.
இதையும் படிங்க : மாத சம்பளம் 10,000 ரூபாய்க்கு தள்ளப்பட்ட சிறுவயது கோச்.. சூரியகுமார் செய்த காரியம் – வெளியான நெகிழ்ச்சி தகவல்
எங்களுக்கு நல்ல அணி கிடைத்திருக்கிறது. நிறைய திறமை இருக்கிறது மேலும் தொடரை வெல்வதற்கான சாத்தியங்கள் அதனால் உருவாகிறது. எங்களால் டி20 உலகக் கோப்பையில் நல்ல முறையில் செயல்பட முடியவில்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அது எங்கள் கிரிக்கெட்டில் ஊக்கம் அளிப்பதாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.






