இலங்கை அணி ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆஸ்திரேலிய அணிக்கு கொடுத்த பிரியாவிடை – நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்

0
279

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று நிறைவு பெற்றது. தொடரை இலங்கை அணி 3-2 என்கிற கணக்கில் கைப்பற்றி 30 வருடங்களுக்கு பிறகு புதிய வரலாற்று சாதனை படைத்தது.

இலங்கையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் 1992ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கை அணி தற்போதுதான் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை இலங்கை மண்ணில் இலங்கை அணி வீழ்த்தி வரலாற்று வெற்றி கண்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை தற்போது தான் வீழ்த்துகிறது. கடந்த 12 வருடங்களாக இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணிக்கு பிரியா விடை கொடுத்த இலங்கை அணி ரசிகர்கள்

- Advertisement -

இலங்கை அணி ரசிகர்களுக்கு இந்த வெற்றி எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் சற்று சுமாராகவே விளையாடி வந்த நிலையில் இப்படி ஒரு வெற்றியை கண்டது அந்த அணிக்கு அதன் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்து இருக்கும். குறிப்பாக அந்நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார நெருக்கடியில் இதுபோன்ற ஒரு வெற்றி அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்து இருக்கும்.

நேற்று நடந்து முடிந்த 5வது போட்டியில் இலங்கை அணி ரசிகர்கள் பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய அணி ஜெர்சியை/மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்துகொண்டு ஆஸ்திரேலிய அணிக்கு பிரியாவிடை கொடுத்தனர். இலங்கை அணி ரசிகர்கள் செய்த இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன்

தொடரில் இலங்கை அணி மிக சிறப்பாக செயல்பட்டதாகவும், தொடர் சற்று கடினமாகவும் சற்று சவாலாகவும் இருந்ததாகவும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் கூறியுள்ளார். இலங்கை அணியில் பார்ட்னர்ஷிப் மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது அது எங்களுக்கு கை கொடுக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இருக்கும் இலங்கை அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை அடைந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

குறிப்பாக இலங்கை அணி ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எங்களுக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். மைதானத்தில் எங்கே பார்த்தாலும் மஞ்சள் நிறமாக உள்ளது இது எங்களுக்கு சந்தோஷத்தை வரவழைக்கிறது என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -