3வது போட்டி டை-யானால் சூப்பர் ஓவர் இருக்குமா?.. 2023 புதிய விதி – இலங்கை கிரிக்கெட் அதிகாரி தகவல்

0
252
ICT

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டை ஆனது. ஆனால் அந்தப் போட்டிக்கு சூப்பர் ஓவர் மூலம் முடிவு காணப்படவில்லை. இந்த நிலையில் விதிகள் மாற்றப்பட்டு இருப்பதாகவும், களத்தில் இருந்த பொறுப்பாளர்கள் தவறு செய்து விட்டதாகவும், மூன்றாவது போட்டி டை ஆனால் சூப்பர் ஓவர் நடத்தப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி முதலில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் டை ஆனது. இந்த நிலையில் அந்தப் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதல் ஒருநாள் போட்டி டை ஆன பொழுது சூப்பர் ஓவர் கொடுக்கப்படவில்லை. இது தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டிக்கான போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே, கள நடுவர்கள் ஜோயல் வில்சன் மற்றும் ரவீந்திர விமலசிறி, ரிசர்வ் நடுவர் ருசிர பல்லிககுருகே, மற்றும் டிவி நடுவர் பால் ரீஃபல் என ஐந்து பேரும் சேர்ந்து முதல் போட்டி டை ஆன பொழுதும் சூப்பர் ஓவர் தேவை இல்லை என முடிவு செய்தார்கள். பல நாடுகள் பங்குபெறும் தொடருக்கு மட்டுமே சூப்பர் ஓவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பயன்படுத்தப்படும் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் தான் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் டிசம்பர் மாதத்தில் இது குறித்து புதிய விதி ஒன்று திருத்தப்பட்டு வெளிவந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த விதியை தெரியாத நடுவர்கள் மொத்தமாக சேர்ந்து சூப்பர் ஓவருக்கு போட்டியை நகர்த்தாமல் பெரிய தவறு செய்து விட்டார்கள்.

- Advertisement -

கிரிக்கெட் விதி 16.1.1.3 படி இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்து போட்டி டை ஆகும்பொழுது சூப்பர் ஓவர் கட்டாயம் கொண்டுவரப்பட்டு போட்டிக்கு முடிவு காணப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஒருவேளை சூப்பர் ஓவர் நடத்தப்படுவதற்கான சூழ்நிலைகள் முற்றிலும் இல்லாவிட்டால் மட்டுமே அதை தவிர்க்க முடியும்.

இதையும் படிங்க :

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி ஒரு வேலை டை-யானால் இந்த முறை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என கூறியிருக்கிறார். ஒருவேளை மூன்றாவது போட்டி டை ஆகி சூப்பர் ஓவர் நடத்தாமல் விட்டால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -