191 ரன்.. அவமானத்தில் தப்பிய இலங்கை.. அசர வைத்த ஜிம்பாப்வே அணி.. பயந்து போன ரசிகர்கள்

0
125
SL

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றி, ஆசியக் கோப்பைக்கு முன்பாக சிறிய அணியிடம் தொடரை இழக்கும் அபாயத்திலிருந்து தப்பித்தது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்தன. இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.

- Advertisement -

ஜிம்பாப்வே ரன் குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் விக்கெட் கீப்பர் மருமாணி 44 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 51 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து சீன் வில்லியம்ஸ் 11 பந்தில் 23 உடன், சிக்கந்தர் ராஸா 18 பந்தில் 28, ரியான் பர்ல் 15 பந்தில் 26 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி பந்துவீச்சில் ஹேமந்தா 3, சமீரா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இளம் வீரர் அதிரடி

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் குசால் மெண்டிஸ் 17 பந்தில் 30 ரன்கள், பதும் நிசங்கா 20 பந்தில் 33 ரன்கள், இளம் வீரர் கமில் மிஸ்ரா 43 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 73* ரன்கள், குசால் பெரேரா 26 பந்தில் 46,* ரன்கள் எடுக்க, இலங்கை அணி 17.4 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இதையும் படிங்க: 414 ரன்.. மிரள மிட்ட இங்கிலாந்து.. அசத்திய ஆர்சிபி வீரர்.. 10 வருடத்தில் மெகா சாதனை

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கு முன்பாக சிறிய அணியான ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடரை இழப்பது இலங்கை அணிக்கு தன்னம்பிக்கையை உடைப்பதாக அமைந்திருக்கும். மேலும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஜிம்பாப்வே ரன் குவிப்பால் போட்டியை இழந்து விடுவோம் என்று பயந்த மாதிரி இல்லாமல், இலங்கை அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு தொடரையும் பெற்றுவிட்டது.

- Advertisement -