142 ரன்.. நம்பர் 1 இங்கிலாந்தை.. ஒரே போட்டியில் வெளியே அனுப்பிய வெஸ்ட் இண்டீஸ்.. வினோத சம்பவம்.. மகளிர் டி20 உலக கோப்பை

0
508
England

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் முதல் மூன்று போட்டிகளை வென்று முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக இன்று ஒரே போட்டியில் தோற்றத்தினால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியே சென்ற சோகமான நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் மூன்றையும் வென்று 6 புள்ளிகள் எடுத்து ரன்ரேட் அடிப்படையிலும் முதலிடத்தில் இருந்தது. நான்கு போட்டியில் மூன்று வெற்றிகள் 6 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா இருந்தது. மூன்றாவது இடத்தில் மூன்று போட்டியில் இரண்டு வெற்றிகள் 4 புள்ளிகள் உடன் வெஸ்ட் இண்டீஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பேட்டிங்கில் சிக்கிய இங்கிலாந்து

இன்று டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு நாட் சிவியர் ப்ரண்ட் 50 பந்துகளில் 5 பவுண்டர்கள் உடன் 57 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹீதர் நைட் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அஃபி பிளட்சர் 3, ஹைலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதைத்தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு வேகமாக ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தள்ளப்பட்டது.

- Advertisement -

அடித்து நொறுக்கிய துவக்க வீராங்கனைகள்

இப்படியான நிலையில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. துவக்க வீராங்கனைகள் ஹைலி மேத்யூஸ் 38 பந்தில் 50 ரன்கள், க்யானா ஜோசப் 38 பந்தில் 52 ரன்கள் எடுத்து அசத்தலான துவக்கத்தை கொடுத்தார்கள்.

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை விட ரன் ரேட் இங்கிலாந்து அணிக்கு குறைந்தது.

இதையும் படிங்க : 89 ரன்.. சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி.. பழைய தந்திரத்தை கையில் எடுத்த இலங்கை.. அபார வெற்றி

மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகள் எடுத்து இருந்த பொழுதும், மூன்று போட்டிகளில் மூன்றையும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணி இருந்த பொழுதும், நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று ரன் ரேட்டை இழந்த காரணத்தினால், பரிதாபமாக அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.

- Advertisement -