உலக கிரிக்கெட்

நியூசிலாந்து டி20.. இலங்கை அணி அறிவிப்பு.. இந்திய வீரர்களை கலங்க வைத்த முக்கிய பவுலர் நீக்கம்

இந்த வருட இறுதியில் இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இழப்பை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பயிற்சியாளர் ஜெயசூர்யா தலைமையில் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணியின் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை வெல்ல சிறப்பான முறையில் ஆயத்தமாகி வருகிறது.

இலங்கை நியூசிலாந்து டி20 தொடர்

இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி வருகிற 28ஆம் தேதியும் இரண்டாவது போட்டி 30ஆம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜனவரி இரண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. மேலும் அதற்குப் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரானது ஜனவரி 5ஆம் தேதி முதல் போட்டியும் எட்டாம் தேதி இரண்டாவது போட்டியும் மூன்றாவது போட்டி 11ம் தேதியும் நடைபெற உள்ளது.

சமீபத்தில் ஜெயசூர்யா பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்ததோடு அதற்குப் பிறகு நடைபெற்று வரும் முன்னணி அணிகளுக்கு எதிரான தொடரில் தங்களது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி மீண்டும் வலுவான இலங்கை அணியாக திரும்பி வருகிறது.

- Advertisement -

இலங்கை அணி அறிவிப்பு

எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சரித் அசலங்கா கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் போன்ற தரமான வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு வனிந்து ஹசரங்கா பொறுப்பேற்கிறார். மேலும் தீக்ஷனா போன்ற சிறந்த வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்த தொடரில் குறிப்பாக துனித் வெள்ளால்கே மட்டும் நீக்கப்பட்டு இருக்கிறார். துனித் வெல்லால்கே இந்திய அணிக்கு எதிரான உள்நாட்டு தொடர் மற்றும் வெளிநாட்டு தொடரிலும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.இவரது பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் ஆன ரோகித், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களே ஆட்டம் இழந்துள்ளனர்.

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை டி201 அணி

அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்க, அஸ் நுத விக்ரமசிங்க, மதிஷார பத்திரமசிங்க பினுர பெர்னாண்டோ.

- Advertisement -
Published by

Recent Posts