BAN vs SL.. ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த 2 வீரர்கள்.. பங்களாதேஷ் பரிதாபம்

0
319
Srilanka

இலங்கை அணி தற்பொழுது பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது. டி20 தொடரை வென்று ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தோற்ற இலங்கை அணி, தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் வந்த கேப்டன் தனஞ்செய டி சில்வா 102 மற்றும் கமிந்து மெண்டிஸ் 102 இருவரும் நெருக்கடியான நிலையில் சதம் அடித்து இலங்கை அணியை காப்பாற்றினார்கள். பங்களாதேஷ் தரப்பில் காலித் அகமத் மற்றும் நாகித் ராணா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இலங்கை அணியின் தரப்பில் விஸ்வா பெர்னாடோ 4 மற்றும் கசூன் ரஜிதா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். பங்களாதேஷ் உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டி என்பதாலும், மேலும் இரு அணிகளுக்கும் இடையே நிறைய உரசல்கள் நடந்து வருவதாலும், இந்த சுற்றுப்பயணத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடையே இருந்தது. போட்டி சமமாக இருந்து வந்த நிலையில் கடைசி டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் தடுக்க ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு அடுத்து 92 ரன்கள் முன்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இலங்கை மீண்டும் கேப்டன் தனஞ்செய டி சில்வா 108, கமிந்து மெண்டிஸ் 164 ரன்கள் என இருவரும் சதம் அடித்தார்கள். ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்களிலும், ஒரே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்கள் எடுத்து அசத்தியது.

இதற்கு அடுத்து 511 ரங்கள் என்கின்ற பெரிய இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணி மீண்டும் பந்துவீச்சில் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இன்றைய ஆட்டநேர முடிவில் 47 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து பங்களாதேஷ் அணி பரிதாப நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் இந்திய அணிக்கு அறிமுகமானது ஹர்திக் கேப்டன்சியில்தான்.. எனக்கு அறிவிருக்கு – திலக் வர்மா பேட்டி

தற்பொழுது பங்களாதேஷ் அணி இன்னும் வெற்றிக்கு 464 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. எனவே இந்த போட்டியை இலங்கை அணி எப்படியும் வெல்வது உறுதியாக இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி வெல்லும் பட்சத்தில், இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் வெற்றி பயணமாக அமையும்!