30 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை – ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ இணைப்பு

0
72

இலங்கையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்தது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரில் தோல்வி அடைந்த இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. முதல் தோல்வி அடைந்த இலங்கை அணி அதற்கு அடுத்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-1 என்கிற கணக்கில் தற்போது தொடரை கைப்பற்றி விட்டது.

- Advertisement -

நேற்று நடந்த முடிந்த நான்காவது போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை கடைசி நேரத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 258 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் அசலங்கா அற்புதமாக சதம் அடித்தார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியை 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி போட்டியை வென்றதோடு மட்டுமல்லாமல் தொடரையும் கைப்பற்றியது.

30 வருடங்களுக்கு பிறகு சாதனை படைத்த இலங்கை அணி

- Advertisement -

இலங்கையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் 1992ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கை அணி தற்போதுதான் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை இலங்கை மண்ணில் இலங்கை அணி வீழ்த்தி வரலாற்று வெற்றி கண்டுள்ளது.

அதுமட்டுமின்றி 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை தற்போது தான் வீழ்த்துகிறது. கடந்த 12 வருடங்களாக இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உற்சாகத்தில் எழுந்து நின்று வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பண நெருக்கடி மற்றும் பணவீக்கம் இருந்து வருகிறது. பொருளாதார விஷயத்தில் இலங்கை அணி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த வரலாற்று வெற்றி மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இலங்கை அணி வரலாற்று வெற்றியை ருசி பார்த்த பின்னர் இலங்கை ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று வெற்றியைக் கொண்டாடினர். அவர்களை அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.