ஸ்ரீசாந்த் பிரச்சனை.. கம்பீருக்கு ஆதரவாக குதித்த இர்ஃபான் பதான்.. களத்தில் என்ன நடக்கிறது?

0
271
Gambhir

இந்தியாவில் தற்பொழுது மூத்த மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று இருக்கிறது.

கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ், அணியும் ஸ்ரீஷாந்த் விளையாடி வரும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியும் நாக் அவுட் போட்டியில் மோதிக்கொண்டன.

- Advertisement -

இந்த போட்டியின் போது கம்பீருக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையில் களத்தில் மோதல் ஏற்பட்டது. நடுவர்கள் மற்றும் கெவின் பீட்டர்சன் போன்றோர் தலையிட்டு மோதலை தடுத்து வைத்தார்கள்.

பிறகு போட்டி முடிந்து இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த் கூறும் பொழுது ” அவர் என்னை வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டினார். நான் அவர் குறித்து எந்த அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை. இதனால் என் மாநிலம் மற்றும் என் குடும்பம் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். அவர் என்ன சொன்னார் என்று விரைவில் வெளியிடுவேன்!” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது வீடியோவில் ஸ்ரீஷாந்த் கூறும் பொழுது “கம்பீர் என்னை மேட்ச் பிக்சர் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மேலும் ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி என்னை திட்டினார்!” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு பதிலடியாக தனது சமூக வலைதள கணக்கில் பதிவிட்டு இருந்த கம்பீர் கூறும் பொழுது ” புன்னகையே எல்லோரது கவனத்தையும் உலகில் ஈர்க்கும்!” என்பதாக கூறியிருந்தார். மேற்கொண்டு அவர் இந்த விஷயத்தில் பெரிதாக எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த் மற்றும் கம்பீர் இடையிலான பிரச்சனையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கம்பீருக்கு ஆதரவாக வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

கம்பீர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “உலகில் புன்னகைதான் மிகச்சிறந்த பதில் சகோதரரே!” என்று அவருக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தற்பொழுது மூத்த மற்றும் முன்னாள் வீரர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனை சமூக வலைதளத்தில் மிகவும் தீவிரமாக இந்திய கிரிக்கெட் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.