நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பையில் விளையாட விட்டாலும் முதலில் நாட்டுப்பற்றோடு இருக்க வேண்டும் என்று இந்திய வீரரை மறைமுகமாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பேசி இருக்கிறார்.
2007ம் ஆண்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற சாதனை படைத்தபோது அதில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் முக்கிய பங்காற்றினார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் பிடித்த கேட்ச் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.
அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தவர் ராஜஸ்தான் அணியில் சூதாட்ட பிரச்சனை காரணமாக சுமார் ஐந்து வருடம் இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு கேரளாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வந்த ஸ்ரீசாந்த் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் உலகக்கோப்பை தொடரின் போது இளம் இந்திய வீரரான ரியான் பராக்கிடம் இந்த உலகக் கோப்பையில் எந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “நான் இந்திய அணியில் இடம் பெறாத காரணத்தால் உலகக்கோப்பை பார்க்க மாட்டேன்” என்று கூறினார்.
இவர் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த் “சில இளைஞர்கள் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாததால் இந்த போட்டிகளை பார்க்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் முதலில் நாட்டுப்பற்றுடனும், கிரிக்கெட் ரசிகராகவும் முதலில் இருங்கள். அணியை தேர்ந்தெடுத்தவர்கள், முழு இதயம் மற்றும் ஆன்மாவோடு அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ரோகித்தின் அந்த ஒரு போன் கால்.. டிராவிட்டின் முடிவை மாற்ற அதுவே காரணம்.. சூரியகுமார் வெளியிட்ட ரகசியம்
ரியான் பராக் பேசியதற்கு ஸ்ரீசாந்த் இறுதிப் போட்டியில் மறைமுகமாக தனது பதிலை கொடுத்திருக்கிறார். மேலும் ரியான் பராக் அடுத்து நடைபெற உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20தொடரில் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி20 உலக கோப்பை வென்ற நிலையில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகள் வருகிற ஆறாம் தேதி முதல் தொடங்க உள்ளது.