இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில், அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ரோஹித் சர்மா தலைமையில் சந்தித்து விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் முதலில் டிசம்பர் 26 பாக்ஸிங் டே அன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
குறிப்பிட்ட அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டியில் முதல் இன்னிங்ஸில் கேஎல்.ராகுலும், இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலியும் மட்டுமே நல்லபடியாக விளையாடியிருக்கிறார்கள்.
அதே சமயத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. குறிப்பாக சர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரது பந்துவீச்சும் சுத்தமாக எடுபடவில்லை.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் வீரர் கவாஸ்கர் கூறும் பொழுது “நீங்கள் எப்பொழுதும் சுற்றுப்பயணம் செய்யும் நாட்டின் உள்நாட்டு சாம்பியன் அணிகளுடன் விளையாட வேண்டும். அந்த அணியின் இளம் வீரர்கள் வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் தங்கள் தேர்வாளர்களை ஈர்க்க சிறப்பாக செயல்படுவார்கள். இதனால் நல்ல பயிற்சி கிடைக்கும்.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு நீங்கள் திட்டங்களை தயாரிக்கும் பொழுது, அந்த நாட்டு உள்நாட்டு கிரிக்கெட் அமைப்புகளிடம் பேசி, அங்குள்ள சிறந்த அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாட வேண்டும்.
நீங்கள் உங்கள் அணியையே இரண்டாகப் பிரித்து விளையாடுவதால் எந்த பயனும் கிடையாது. நீங்கள் வீட்டில் நேரத்தை செலவிட்டு விட்டு, அப்படியே இங்கு வந்து விளையாட முடியுமா? உங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவர்கள் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட மாட்டார்கள். எனவே உங்களுக்கு அதன் மூலமாக நல்ல பயிற்சி கிடைக்காது.
இது இப்பொழுது மட்டும் நடப்பதில்லை. எங்கள் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. கண்டிஷன் மாறுகின்ற காரணத்தினால் இப்படி நடக்கிறது. எனவே இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு நீங்கள் பழக வேண்டும் என்றால் பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!