வருகிற ஜூன் 9 முதல் 19ஆம் தேதி வரையில் 5th டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கின்றது. முதல் போட்டி வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற இருக்கின்றது. அதன் பின்னர் கட்டாக் விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூரு நகரங்களில் நடைபெற இருக்கின்றது.
டி20 தொடருக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் வெளியாகிவிட்டது. அதில் இந்திய வீரர்கள் பட்டியலில் பலம் வாய்ந்த ஸ்பின் பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க புதிய உத்தியை கையில் எடுத்துள்ள தென் ஆப்பிரிக்க அணி
5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் நிச்சயம் இந்திய அணியை லேசாக எடை போட்டுவிடக் கூடாது என்று தென் ஆப்பிரிக்க அணி முடிவு செய்துள்ளது. முக்கியமாக ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க முடிவு செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 14 வயது இந்திய இளம் ஸ்பின் பந்து வீச்சாளரான ரவுனக் வகேலாவை நெட் பந்துவீச்சாளராக நியமித்து அதிரடி காட்டியுள்ளது.
தற்பொழுது தென்ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் அவர் துணைகொண்டு ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இரு அணிகளும் மாறி மாறி சிறப்பாக தயாராகி வருவதால், போட்டி மிகப்பெரிய விருந்தாக அமைய போவதில் எந்த வித சந்தேகமும் இல்லை.