தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் ககிசோ ரபாடா வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களால் வெல்ல முடியும் என்று தங்களுக்கு தெரியும் என்று சவால் அளிக்கும் முறையில் பேசி இருக்கிறார்.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு போட்டிகளில் ஒரு போட்டியை வென்று மூன்று போட்டிகளில் தோற்று இருக்கிறது. எனவே அவர்கள் தொடர்ந்து முன்னேற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல விரும்புவார்கள்.
அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளையும் தோற்று இழந்தது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி துவங்குகிறது.
இந்தத் தொடருக்கு முன்பாக பேட்டி அளித்திருக்கும் ககிசோ ரபாடா கூறும்பொழுது “வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல முடியும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் இதை உறுதியாக நம்புகிறோம். மேலும் கரீபியன் சுற்றுப்பயணம் செய்வதற்கு மிகவும் அருமையான இடம் நான் இங்கு வர விரும்புகிறேன். மேலும் இங்கு சிறந்த கிரிக்கெட் வரலாறு இருக்கிறது.
கிரிக்கெட் என்பது எப்பொழுதும் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தரக்கூடியது. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா சென்று அந்த அணியை தோற்கடித்ததை நாம் பார்த்தோம். அது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டில் ஒரு தீப்பொறியை உருவாக்கி இருக்கிறது. அவர்களது கிரிக்கெட்டில் இப்படி மீண்டும் மீண்டும் நடக்க வேண்டும்.
அந்த போட்டியை வெல்ல ஷமர் ஜோசப் பந்து வீசிய பிறகு நடந்து மக்கள் அழுதார்கள், அது மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளில் ஆன கதைகளை சொல்கிறது. எனவே நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அந்த காட்சிகளை பாருங்கள் அது உங்களுக்கு நிறைய சொல்லித் தரும்.
இதையும் படிங்க : கில்லுக்கு இந்த பெரிய பலவீனம் இருக்கு.. சுதாரிக்கலனா அந்த பையன் வந்துடுவாரு – சல்மான் பட் அறிவுரை
ரசிகர்களின் நல்ல பொழுதுபோக்குக்காக நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். நல்ல கிரிக்கெட் விளையாடும் பொழுது சிறந்த அணிகள் அப்படியான அணிகளுடன் விளையாடு விரும்புகின்றன என்று நான் நினைக்கிறேன். உண்மையில் நன்றாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்பது நம் கையில்தான் இருக்கிறது. நீங்கள் நன்றாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் உங்களை பின்தொடர்ந்து வரக்கூடியவர்களுக்கும் அது கிடைக்கக்கூடியதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.