இந்திய கிரிக்கெட்

ஆஸியை எப்படி ஜெயிக்கிறதுனு எங்களுக்கு தெரியும்.. WTC பைனல்ல இதை செய்வோம் – ரபாடா சவால்

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் ரபாடா ஆஸ்திரேலியா அணியை எப்படி வீழ்த்துவது என்று தங்களுக்கு தெரியும் என அதிரடியாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள்களில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை தாண்டி இந்த முறை தகுதி பெற்று இருக்கிறது. மேலும் அவர்கள் தகுதி பெற்ற விதத்தில் சில விமர்சனங்களும் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது WTC பைனல்

இந்த முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரையில் இந்த இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணியை எப்படி வீழ்த்துவது என்று தங்களுக்கு தெரியும் என ரபாடா அதற்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

மேலும் இந்த முறை தென் ஆப்பிரிக்க அணி வெறும் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. இதில் மூன்று பெரிய கிரிக்கெட் நாடுகளில் இந்தியாவுடன் மட்டுமே சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா விளையாடி இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் அவர்கள் ஒரு போட்டியில் கூட இந்த சைக்கிளில் விளையாடவில்லை. தற்பொழுது இது விமர்சனமாக செல்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸியை வெல்ல எங்களுக்கு தெரியும்

இதுகுறித்து ரபாடா பேசும் பொழுது “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இது இன்னும் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் இப்படியான ஒரு இறுதிப் போட்டி மிகப்பெரிய ஒரு நிகழ்வு. எனவே அது உங்களை தூண்டவே செய்யும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு நடுவில் எப்பொழுதும் கடுமையான போட்டி இருந்து வருகிறது. ஏனென்றால் நாங்கள் கிரிக்கெட்டை ஒரே மாதிரி விளையாடுகிறோம். நாங்கள் கடினமாக விளையாடுகிறோம். எனவே அவர்கள் எங்களிடம் மிகக் கடினமாக மோத வருவார்கள்” என்று எங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க : களத்தில் பும்ராவுடன் சண்டை.. என்ன நடந்தது உண்மையில் யார் மீது தவறு? – கான்ஸ்டாஸ் விளக்கம்

“100% டெஸ்ட் கிரிக்கெட் உயிருடன் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறோம். எங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாறை எடுத்துப் பார்த்தால், எங்களுடைய ஜாம்பவான் வீரர்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் உள்நாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடர் சிறந்த விளம்பரமாக அமைந்தது. மேலும் ஆஸ்திரேலியா அணியை எப்படி வீழ்த்துவது? என்று எங்களுக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by