இந்திய கிரிக்கெட்

168/2 டு 270/10.. திருப்பம் தந்த கேஎல் ராகுலின் திட்டம்.. பிரசித் குல்தீப் அசத்தல்.. தென் ஆப்பிரிக்க அணி சுருண்டது

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்க அணியை மடக்கி இருக்கிறது. பிரசித் கிருஷ்ணா குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கலக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

குயிண்டன் டி காக் அபாரம்

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்ல முதலில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய வந்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 0, கேப்டன் டெம்பா பவுமா 48, பிரிட்ஸ்கீ 24, மார்க்ரம் 1, டிவால்ட் பிரிவிஸ் 29, மார்க்கோ யான்சென் 17, கார்பின் போஸ் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அபாரமாக விளையாடி 80 பந்துகளில் சதம் அடித்தார். தென் ஆபிரிக்க அணி 168 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இருந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

திருப்பம் தந்த திட்டம்

இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா முதல் இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவரை நிறுத்தி வைத்த கேஎல்.ராகுல் பிறகு ஷார்ட் பந்துகள் வீச வேண்டாம் என அறிவுரை கூறி மறு வாய்ப்பு கொடுத்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பிரசிப் கிருஷ்ணா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியது இந்திய அணிக்கு திருப்புமுனையை கொடுத்தது.

இதையும் படிங்க :ஆசஸ் 2வது டெஸ்ட்.. தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்.. பந்துவீச்சில் தெறிக்கவிட்ட ஆஸ்திரேலியா

இதற்கு அடுத்து இரண்டாவது ஸ்பெல்க்கு வந்த குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் கைப்பற்ற இந்திய அணியின் பக்கம் மொத்த ஆட்டமும் வந்தது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் இருந்த அளவிற்கு பனிப்பொழிவு விசாகப்பட்டினத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

- Advertisement -
Published by