தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் சீரிஸ்.. 15பேர் கொண்ட இந்திய அணி.. புதிய பேட்டிங் லைன்அப்!

0
20837
Rohit

இந்திய அணி தனது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அடுத்து ரோகித் சர்மா தலைமையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது.

இதை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் நியூ ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் டிசம்பர் 26 தொடங்கி நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணியில் இருந்து முகமது சமி காயத்தின் காரணமாக விலகி இருக்கிறார். இவருடைய இடத்திற்கு ஆகாஷ் தீப் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

தற்பொழுது இந்த இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக இருந்த ரகானே அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். புஜாராவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் இஷான் கிஷான் சொந்த காரணத்தினால் வீடு திரும்பி இருப்பதால், கேஎஸ்.பரத் அழைக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் இந்த இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் திரும்பி இருக்கிறார். அத்துடன் கே.எல்.ராகுலுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் தேர்வாகி இருக்கிறார். இதன் காரணமாக இந்திய பேட்டிங் லைன் அப் மிகவும் வலிமையாக மாற வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

கடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் மூன்றாவது இடத்திற்கு தானே விரும்பி கீழே இறங்கிக் கொண்டார். ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக விளையாடினார்கள். ஜெயஸ்வால் அறிமுகப் போட்டியில் சதமும் அடித்தார். எனவே துவக்க இடத்தில் இடதுகை ஜெய்ஸ்வால் இடம் உறுதியாக இருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ஜடேஜா என முதல் ஏழு இடங்களில் அமைய அதிக வாய்ப்புகள் உண்டு. எட்டாவது இடத்தில் சர்துல் தாக்கூர் நிச்சயம் இடம் பெறுவார். எனவே பேட்டிங் வரிசை 8 வரை நீளும். அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கடினமே!

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (து. கே), பிரசித் கிருஷ்ணா மற்றும் கேஎஸ் பாரத் (வி. கீ.).