பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 226 ரன்கள் தேவைப்படுகிறது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்க அணிகள் முதல் முறையாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானில் மோதிக் கொள்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 93 ரன்கள், சல்மான் அலி ஆகா 93 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 110.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் முத்துசாமி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மிடில் ஆர்டர் டோனி டி சோர்சி சதம் அடித்து 107 ரன்கள் எடுத்தார். அந்த அணி 89 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் பந்துவீச்சில் நோமன் அலி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து முன்னிலையுடன் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் 42 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 167 ரன்கள் எடுத்து சுருண்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மீண்டும் முத்துசாமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இன்று மூன்றாவது நாளில் மீண்டும் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : அஸ்வின் ஸ்ரீகாந்துக்கு கம்பீர் தந்த பதிலடி சரிதான்.. பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவல்.. என்ன நடந்தது?
தற்போது தென் ஆப்பிரிக்க கையில் எட்டு விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 226 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு அதிகபட்ச சாதகத்துடன் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியின் வாய்ப்புக்கு தென் ஆப்பிரிக்க அணியால் போட்டி அளிக்க முடியும். இந்த நிலையில் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இந்திய அணிக்கு சாதகமான முடிவாக இருக்கும்!