நாங்களா சின்ன பசங்க?.. 2 நாள் 221 ரன்.. நியூசிலாந்துக்கு பயம் காட்டும் தென் ஆப்பிரிக்கா

0
61
SA

அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்து வருகிறது.

உள்நாட்டில் தென் ஆப்பிரிக்கா டி20 லீக் நடைபெற்ற காரணத்தினால், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு அனுபவமே இல்லாத ஒரு புதிய அணியை தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் அனுப்பியது.

- Advertisement -

இந்த அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இடம் மிகப்பெரிய படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இதற்கு நேர்மாறாக அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணி செயல்பட்டு வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு சுருட்டி 31 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. துவக்க வீரரான கேப்டன் நீல் பிராண்ட் 34 ரன்களும், ஆறாவது இடத்தில் வந்த கீகன் பீட்டர்சன் 43 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஐந்தாவது இடத்தில் வந்த பெடிங்ஹாம் மிகச் சிறப்பாக விளையாடி 141 பந்துகளில் 12 பவுண்டர்கள் உடன் 110 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது டெஸ்டில் கடும் போராட்டத்தை கொடுக்கிறது.

இதற்கடுத்து 267 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் 40 ரன்கள் எடுத்து கான்வோ விக்கெட்டை இழந்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாள் மீதம் இருக்க 9 விக்கெட்டுகள் கைவசத்தில் 227 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் நியூசிலாந்து இருக்கிறது.

இதையும் படிங்க : கிரிக்கெட் கமெண்ட்ரியில் சர்பராஸ் கான் அப்பா.. ஆகாஷ் சோப்ரா கேள்விக்கு மாஸ் பதில்

பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில், அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணியை அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தினால், அது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றியாக பதிவாகும். மேலும் தற்பொழுது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.