சவுத் ஆப்பிரிக்கா ஹேப்பி..இந்தியாவுக்கு சோகம்.. டெஸ்ட் சீரிஸ் வெளியான தகவல்!

0
748
Virat

இந்திய அணியின் தற்போதைய தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதலில் டி20 மற்றும் அடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன.

சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 தொடரை சமனில் முடித்தது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கேஎல்.ராகுல் தலைமையில் வென்றது. இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை சிவப்பு பந்தில் டெஸ்ட் தொடரை மற்றும் வென்றதே கிடையாது. இதற்கு மூன்று முறை வாய்ப்புகள் அமைந்தும் இந்திய அணி கோட்டை விட்டு இருக்கிறது.

மிகக்குறிப்பாக கடந்த முறை விராட் கோலி தலைமையில் சென்ற இந்திய அணி வலிமையானதாக கருதப்பட்டது. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி மிகவும் பலவீனமான அணியாகக் கணிக்கப்பட்டது.

இதற்கேற்றார் போல் முதல் டெஸ்டில் இந்திய அணி வெல்லவும் செய்தது. ஆனால் அதற்கு அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று இந்திய அணி தொடரை இழந்தது.

- Advertisement -

இந்திய அணி உலகில் தான் டெஸ்ட் விளையாடிய எல்லா நாடுகளிலும் தொடரை வென்று இருக்கிறது. ஆனால் தென் ஆப்பிரிக்க மண் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு சோகமான வரலாறாகவே இருந்து வருகிறது.

இந்த முறை இதை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறும் சமயத்தில், தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி இருவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவது கடினம் என்று கூறப்பட்டது. எனவே இந்திய அணி இந்த முறை தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை சுலபமாக வெல்லும் என்று பலர் பேசி வந்தார்கள்.

தற்போது சில நிமிடங்களுக்கு முன்பாக ககிசோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி இருவரும் முதல் டெஸ்ட்டுக்கு உடல் தகுதி பெற்று தயாராக இருக்கிறார்கள் என்கின்ற செய்தி வந்திருக்கிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி முழுமையான வேகப்பந்து வீச்சு தாக்குதலை இந்த முறையும் இந்திய அணையின் மீது தொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.எனவே பல முன்னாள் வீரர்கள் கூறுவது போல இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றி இந்திய பேட்ஸ்மேன்கள் கையில்தான் இருக்கிறது!