இன்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில், தாங்கள் டிக்ளர் செய்ய ஏன் தாமதம் செய்தோம் என்பது குறித்து, தென் ஆப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் கான்ராட் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 450 ரன்கள் முன்னிலை பெற்றதும், இந்திய அணியை பேட்டிங் செய்ய வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி 548 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு டிக்ளர் செய்தது. இந்த தாமதத்திற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் சில காரணங்களை கூறியிருக்கிறார்.
முணுமுணுக்க வைக்க வேண்டும்
இந்திய அணியை அதிக நேரம் களத்தில் நிற்க வைத்து அவர்களை சலிப்படைய வைக்க வேண்டும் எனவும், மேலும் மைதானத்தில் கடைசி நேரத்தில் நிழல் வரும் பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகம் இருப்பதை தாங்கள் உணர்ந்ததாகவும், எனவே டிக்ளர் முடிவை தாமதம் செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கான்ராட் பேசும் பொழுது “இந்திய அணியை முடிந்த வரையில் அதிக நேரம் மைதானத்தில் நிற்க வைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அவர்களை சலிப்படையை வைத்து முணுமுணுக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் பிறகு அவர்களை முழுமையாக பேட் செய்ய வைக்க வேண்டும் என்பது எங்களுடைய திட்டம். குறிப்பாக இன்றைய நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் உள்ளே சென்று உங்களால் முடிந்த வரையில் தற்காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல நினைத்தோம்”
புதிய பந்தின் பயன்பாடு
“இதில் இன்னொரு முக்கிய விஷயமாக நாளை ஐந்தாவது நாளின் காலையில் எங்கள் கையில் புதிய பந்து இருக்க வேண்டும் என்று நினைத்தோம். எனவே நாங்கள் இன்று மாலை குறைவாக புதிய பந்தை பயன்படுத்த வேண்டும் என்று டிக்ளர் செய்வதை தாமதப்படுத்தினோம்”
இதையும் படிங்க : கம்பீரை பார்த்து எனக்கு பயம் கிடையாது.. இத்தனை தப்ப மோசமா பண்ணி வச்சிருக்காங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“மாலையில் மைதானத்தில் நிழல் விழ ஆரம்பிக்கும் பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏதாவது சாதகம் கிடைக்கிறது என்று உணர்ந்தோம். எனவே அதற்கு முன்பாகவே புதிய பந்தை வீணாக்க வேண்டாம் என முடிவு செய்தோம். இதன் காரணமாகவே கடைசி ஒரு மணி நேரம் மட்டுமே இந்திய அணியை பேட்டிங் செய்ய வைத்தோம்” என்று கூறி இருக்கிறார்.






