2 விக்கெட்.. தென் ஆப்பிரிக்கா நங்கூரம்.. ஆனாலும் போட்டி இந்தியா கையில்.. எப்படி சாத்தியமானது?

0
281
Kuldeep

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது செஷன் முடிவடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த அசாம் கவுகாத்தி ஆடுகளம் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்றது சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா நங்கூரம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 82 ரன்கள் கிடைத்தது. எய்டன் மார்க்ரம் 81 பந்தில் 38 ரன்கள், இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிகல்ட்டன் 82 பந்தில் 35 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா ஆட்டம் இழக்காமல் 86 பந்தில் 36 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 82 பந்தில் 32 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இரண்டு செஷன் முடிவடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

ஆட்டம் இந்தியாவின் கையில்

தற்போது தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இருந்தாலும் கூட 55 ஓவர்களில் 2.84 ரன் ரேட்டில்தான் 156 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணியின் பந்து வீச்சு கட்டுப்பாடு சிறப்பாக இருக்கிறது. எனவே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கிடைத்தால் கூட இந்திய அணி போட்டிக்குள் எளிதாக வந்து விட முடியும்.

இதையும் படிங்க: 204 ரன்.. இங்கிலாந்தை பேட்டிங்கில் காப்பாற்றிய பவுலர்கள்.. ஆஸிக்கு மீண்டும் தலைவலி – வெற்றி பெற முடியுமா?

இந்தியாவில் முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங் செய்ய சாதகமாக அமைக்கப்படும் ஆடுகளங்களில் எதிரணியின் ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், பின்பு அவர்களை 300 முதல் 350 ரன்கள் கட்டுப்படுத்தி போட்டியை வெல்ல முடியும். தற்போது இந்தியா அந்தப் பாதையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -