இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சிறப்பான கேப்டன்சி செய்து தென் ஆப்பிரிக்க அணியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்று இந்திய அணியில் ஆச்சரியப்படும் விதமாக சாய் சுதர்சன் நீக்கப்பட்டு கூடுதலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஒரு முனையில் பும்ரா மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி கொண்டு இருந்தார். இன்னொரு முனையில் சிராஜ் மற்றும் அக்ச்சர் படேல் இருவரது பந்து வீச்சிலும் ரன்கள் பெரிய அளவில் சென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா 50 ரன்கள் எளிதாகக் கடந்தது.
இதைத்தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் பும்ராவுக்கு ஒரு முனையில் 7 ஓவர்கள் தொடர்ந்து வீசுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். இது சிறந்த முறையில் பலன் அளிக்க எய்டன் மார்க்ரம் 48 பந்துகளில் 31 ரன், ரியான் ரிக்கல்ட்டன் 22 பந்தில் 23 ரன்கள் என இருவரது விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா விளையாட வந்தார். குல்தீப் ஓவரில் அவருக்கு ஹெல்மெட் அணிந்தபடி அருகில் ஷார்ட் லெக்கில், இரண்டாவது விக்கெட் கீப்பரான துருவ் ஜுரலை கேப்டன் கில் நிற்க வைத்தார். விக்கெட் கீப்பரை அந்த இடத்திற்கு கொண்டு வந்தது சிறப்பான முடிவாக இருந்தது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டு வீரர்களை வைத்து கம்பீர் ஆடிய வினோத ஆட்டம்.. கும்ப்ளே ஆச்சரியம்.. இனி இது தொடருமா?
இதைத் தொடர்ந்து இன்று விக்கெட் கீப்பிங் செய்து வரும் ரிஷபான்ட் துருவ் ஜுரலை கொஞ்சம் தன் பக்கம் வரும்படி அட்ஜஸ்ட் செய்து நிற்க வைத்தார். இதற்கு உடனடி பலனாக டெம்பா பவுமா விக்கெட் கிடைத்தது. இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் விக்கட்டை கைப்பற்றியது களத்தில் அற்புதமான சம்பவமாக அமைந்தது. மதிய உணவு இடைவேளை என்பது தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருக்கிறது.