கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகள்.. தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் இல்லை

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான அணிகளை அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் இரு டெஸ்ட் போட்டிகள் தொடருக்குப் பிறகு, வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்கள் தொடங்கவுள்ளன. தென்னாப்பிரிக்கா முழு பலம்வாய்ந்த அணிகளையே இந்தியாவுக்கு அனுப்புகிறது.

- Advertisement -

டெஸ்ட் அணியை வழிநடத்தும் டெம்பா பவுமா ஒரு நாள் அணியையும் கேப்டனாக வழிநடத்துவார். அதேநேரம் டி20 அணியை ஐடன் மார்க்ரம் கேப்டனாக வழிநடத்துவார். முதலில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும், பின்னர் 5 டி20 போட்டிகள் நடக்கும். ஒருநாள் தொடர் நவம்பர் 30ல் தொடங்குகிறது. டி20 தொடர் டிசம்பர் 9 முதல் தொடங்கும்.

முக்கிய வீரர்கள் இல்லை:

ககிசோ ரபாடா இந்த வெள்ளைப் பந்து தொடரில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக முதல் டெஸ்ட்டிலும் ஆடவில்லை, இரண்டாவது டெஸ்ட்டிலும் ஆட மாட்டார். அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் ரயன் ரிக்கெல்டன் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகள் ராஞ்சி, ராய்ப்பூர், விசாகப்பட்டினத்தில் நடைபெறும். டி20 போட்டிகள் கட்டக், நியூ சண்டிகர், தர்மசாலா, லக்னோ, அகமதாபாத்தில் நடைபெறும். தென்னாப்பிரிக்கா கடைசியாக இந்தியாவில் 2022- 23 சீசனில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. அப்போது 3 ஒருநாள் ,3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.

- Advertisement -

ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் ஒருநாளில் தென்னாப்பிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அடுத்த இரு போட்டிகளையும் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.  டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

அணிகள் விவரம்:

தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி: : டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்ட்னீல் பார்ட்மேன், மாத்யூ ப்ரீட்ஸ்கே, கொர்பின் பாஷ், டிவால்ட் ப்ரெவிஸ், நான்ட்ரே பர்கர், குயின்டன் டி காக், டோனி டி சோர்ஸி, ரூபின் ஹெர்மன், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், ரயன் ரிக்கெல்டன், ப்ரெனலன் சுப்ரயன், லுங்கி நிகிடி.

இதையும் படிங்க: கில் பத்தி ஒரு முடிவெடுத்து ஒரு பிளேயர் கிட்ட சொல்லிட்டோம்.. இந்த ஆடுகளம் இப்படி தான் – ரிஷப் பண்ட் பேச்சு

தென்னாப்பிரிக்கா டி20 அணி:ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்ட்னீல் பார்ட்மேன், டிவால்ட் ப்ரெவிஸ், கொர்பின் பாஷ், குயின்டன் டி காக், டோனி டி சோர்ஸி, டொனோவன் பெரீரா, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மஹராஜ், க்வேனா ம்பாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே.

- Advertisement -
Published by

Recent Posts