இந்திய கிரிக்கெட்

ரோகித் சர்மா பிரஸ் மீட்டுக்கு வராத காரணம் இதுதான்.. உங்களுக்கு அந்த செய்தி வரலாம் – கங்குலி கணிப்பு

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவாரா? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மிக முக்கியமான விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்திய அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகர்கர் உடன் சந்திப்பு

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் உடன் தனது ஓய்வு குறித்து ஆலோசிக்க இருக்கிறார் என்கின்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இறுதிப் போட்டிக்கு முன்பாக அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பது ஏன் என்று சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறும் பொழுது ” தற்போது ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து ஏன் பேசப்படுகிறது? ஏன் இப்படியான கேள்வி வெளியாகிக் கொண்டிருக்கிறது? அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் டி20 உலகக் கோப்பையை வென்றார். அவர் விளையாடுவது பற்றி தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. இந்தியா அடுத்தடுத்து இரண்டு ஐசிசி தொடர்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. தற்பொழுது மூன்றாவது முறையாகவும் தகுதி பெற்று இருக்கிறது”

- Advertisement -

பிரஸ் மீட்டுக்கு வராத காரணம்

“இந்திய அணி இறுதிப் போட்டியை வென்றால் ரோகித் சர்மா தன்னுடைய ஓய்வை அறிவிக்க மிகவும் சரியாக இருக்கும். இதன் காரணமாகவே அவர் இறுதிப் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்திருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தால் அவர் ஓய்வு குறித்து முன்கூட்டியே பேச வேண்டியது இருக்கும் என்று தவிர்த்து இருக்கிறார். இது புரிந்து கொள்ளக் கூடியது”

இதையும் படிங்க : உங்களை நாங்க மதிக்கிறோம்.. ஆனா வார்த்தையை கவனமா பயன்படுத்துங்க.. சுனில் கவாஸ்கருக்கு பாக் முன்னாள் கேப்டன் கண்டனம்

“இந்திய அணி இந்த தொடரில் பேவரைட் ஆக இருக்கிறது. ஒட்டுமொத்த அணியில் உள்ள அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இந்த இறுதிப்போட்டி நல்ல ஒரு போட்டியாக இருக்கும். இந்தியாவின் பவுலிங் யூனிட் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் தோற்கலாம் ஜெயிக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by