நடப்பு 18வது ஐபிஎல் சீசனில் எந்த அணி ஐபிஎல் சாம்பியன் ஆகும் என்றும், யார் அதிக விக்கெட் கைப்பற்ற கூடியவராக இருப்பார்கள் என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பதினெட்டாவது ஐபிஎல் சீசன் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலமாக துவங்குகிறது. சொந்த மைதானத்தில் விளையாடுகின்ற காரணத்தினாலும் தனிப்பட்ட பலத்தினாலும் கேகேஆர் அணி இந்த போட்டியை வெல்லும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்?
இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் கொல்கத்தா டெல்லி, குஜராத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நான்கும் பலமாக காணப்படுகின்றன. இந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக குஜராத் அணி மீண்டும் வலிமையடைந்து இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இத்துடன் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணி ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்களை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வலிமையான பேட்டி யூனிட் வைத்திருப்பதால் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு ஓரத்தில் இருக்கிறது. இந்த அணிகளுக்கு அடுத்து மற்ற நான்கு அணிகளும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்?
இதுகுறித்து சவுரவ் கங்குலி பேசும் பொழுது ” இப்போது எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கூறுவது மிகவும் விரைவாக பதில் சொல்வது போன்றது ஆகும். ஐபிஎல் மிக நீண்ட தொடர் மற்றும் போட்டித் தன்மை கொண்ட தொடர். எனவே யார் வெல்வார்கள் என்பது குறித்து எடுத்ததுமே சொல்ல முடியாது. தொடர் நடந்து பாதியை கடக்கும் பொழுதுதான் அது குறித்து பேச முடியும்”
இதையும் படிங்க : பஞ்சாப் நாங்கதான் ஐபிஎல் கப் ஜெயிப்போம்.. இந்திய இளம் வீரர்கள் மாஸ் பண்ண ஒரு வழி இருக்கு – ரிக்கி பாண்டிங் பேச்சு
” அதே சமயத்தில் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறையும் வலிமையான அணியாக காணப்படுகிறது. இந்த அணிக்கு கொஞ்சம் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும். மேலும் வருண் சக்கரவர்த்தி முன்பை விட சிறப்பாகப் பந்து வீசுகிறார். எனவே அவர் அதிக விக்கெட் கைப்பற்றலாம்” என்று கூறியிருக்கிறார்.






