விராட் கோலியின் 100வது டெஸ்ட் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை உறுதிப்படுத்தியுள்ள கங்குலி – ரசிகர்கள் மகிழ்ச்சி

0
367
Ganguly about Virat Kohli 100th Test

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 2 தொடரிலும் விளையாடப் போவது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடந்து முடிந்தவுடன் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று துவங்குகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25-ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பின்னர் மார்ச் மாதம் 13 மார்ச் 18ம் தேதி வரையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்பது தற்பொழுது வரை தெரிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் பிசிசிஐ தரப்பிலிருந்து இது சம்பந்தமான முடிவு கிடைக்க பெறும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

பெங்களூருவில் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் விராட் கோலி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது கூடுதல் சிறப்பு. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று தற்பொழுது அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் விராட் கோலியின் ரசிகர்கள் அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய இரண்டாவது தாயகமாகவே பெங்களூரு பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது அந்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை, அதுவும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமைய இருக்கின்ற அப்போட்டியில் அவர் விளையாட இருப்பதால் அவருடைய ரசிகர்கள் தற்போதே அப்போட்டி குறித்து சமூக வலைதளங்களில் பேச தொடங்கிவிட்டனர்.