“ஜடேஜாகிட்ட இருந்து ஆட்டநாயகன் விருத திருடினதுக்கு மன்னிச்சுக்கோங்க!” – விராட் கோலி ஜாலியான வெளிப்படையான பேச்சு!

0
1457
Virat

இன்றைய நாளில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இருக்கிறது.

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் தன்னுடைய நான்காவது ஆட்டத்தில் நான்காவது வெற்றியைப் பெற்றிருக்கிறது. தற்பொழுது புள்ளி பட்டியலில் இதே போல் நான்கு வெற்றிகளை நான்காட்டங்களில் பெற்று ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 256 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா மற்றும் பும்ரா இருவரும் பந்துவீச்சில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 48, சுப்மன் கில் 53, ஸ்ரேயாஸ் ஐயர் 19, கேஎல்.ராகுல் 34, விராட் கோலி 103 ரன்கள் எடுக்க இந்திய அணி 41.3 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்றது.

இன்று வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டபொழுது விராட் கோலியின் சதத்திற்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையிலிருந்து விராட் கோலி 19 ரன்கள் எடுத்து, ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 48வது சதத்தை பதிவு செய்தார். இதன் காரணமாக அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

- Advertisement -

இது குறித்து விராட் கோலி கூறும் பொழுது “ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை திருடியதற்கு என்னை மன்னிக்கவும். நான் ஒரு பெரிய பங்களிப்பை செய்ய விரும்புகிறேன். நான் உலகக் கோப்பையில் அரைசதங்கள் மட்டும் அடித்துக் கொண்டிருக்கிறேன். அதை இந்த முறை முடித்து வைக்க விரும்பினேன்.

ஆட்டத்தை துவங்கும் பொழுது ஃப்ரீ ஹிட் கிடைப்பது சிறப்பான ஒன்று. நான் இதுகுறித்து கில் இடம் ‘ இப்படி ஒரு வாய்ப்பை கனவு காண தூங்கதான் வேண்டும்!’ என்று கூறினேன். இப்படி அமைவது எடுத்ததும் விளையாடுவதற்கு நம்மை அமைதிப்படுத்தும்.

ஆடுகளம் நன்றாக இருந்தது. கேப்களை பார்த்து பவுண்டரிகளை கண்டறிய எனக்கு இது உதவி செய்தது. ட்ரெஸ்ஸிங் ரூமில் எல்லோரும் நல்ல ஸ்பிரிட் உடன் இருக்கிறார்கள். இப்படி வெளியே வந்து விளையாடுவதற்கு டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல வேகத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய கூட்டத்தின் முன் விளையாடுவது சிறப்பான உணர்வு!” என்று கூறியிருக்கிறார்!