டாப் 10

தந்தை விளையாடிய அளவுக்கு விளையாட தவறிய 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மகன்கள்

சினிமா துறையில் அனைத்து பெரிய ஹீரோக்களின் சொந்த மகன்களும் அவர்களைப் போல பெரிய ஹீரோ ஆனது கிடையாது. ஒரு சில பெரிய ஹீரோக்களின் மகன்கள் மட்டுமே தந்தை அளவுக்கு நடித்து பெரிய ஆளாகி இருக்கின்றனர். ஆனால் மறுபக்கம் பல முன்னணி ஹீரோக்களின் சொந்த மகன்கள் தனது அப்பா அளவுக்கு நடிக்க முடியாமல் சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்து காணாமல் போயிருக்கின்றனர்.

- Advertisement -

அது அப்படியே கிரிக்கெட் போட்டிக்கும் பொருந்தும். கிரிக்கெட்டில் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களின் சொந்த மகன்கள் ஒரு சிலர் மட்டுமே பேர் சொல்லும் அளவுக்கு சாதித்துக் காட்டியுள்ளனர். ஆனால் மறுபக்கம் ஒரு சிலர் சரியாக விளையாடாமல் பாதியிலேயே காணாமல் போயிருக்கின்றனர். அப்படி சரியாக விளையாடாத வீரர்களைப் பற்றி தற்பொழுது பார்ப்போம்

சுனில் கவாஸ்கர் – ரோகன் கவாஸ்கர்

ஆரம்ப காலகட்டங்களில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். இவரைப் பார்த்து டெஸ்ட் போட்டிகளில் தானும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று வந்த பல வீரர்களும் உண்டு. அந்த அளவுக்கு மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் இவர்.

சர்வதேச அளவில் இந்திய அணிக்காக 13,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார். டெஸ்ட் போட்டியில் மட்டும் 34 சதங்கள் குவித்துள்ளார். அப்படிப்பட்ட வீரன் இவருடைய மகன் ரோகன் தனது தந்தை அளவுக்கு விளையாட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இரஞ்சி டிராபி தொடரில் பெங்களூர் அணிக்காக இவர் மிக சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் அளவுக்கு அது பத்தாமல் போனது. இருப்பினும் இந்திய அணிக்காக பதினோரு ஒருநாள் போட்டிகளில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் சரியாக விளையாடாத காரணத்தினால், இவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பின்றி காணாமல் போனார்.

சர் லென் ஹட்டன் – ரிச்சர்ட் ஹட்டன்

1950 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு டெஸ்ட் வீரர் தான் லென் ஹட்டன். சுமார் எழுபத்தி 9 டெஸ்ட் போட்டிகளில் இவரது பட்டிங் அவரேஜ் 57 ஆக இருந்தது. குறிப்பாக 2050ஆம் ஆண்டு இவர் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சாதனையாக 1953 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி, இங்கிலாந்து அணிக்காக முதல் ஆஷஸ் வெற்றி 19 வருடங்களுக்குப் பிறகு பெற்றுக் கொடுத்தார். இவரது மகன் ரிச்சர்ட் கவுண்டி கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 270 போட்டிகளில் விளையாடி 625 விக்கட்டுகளையும் 7 ஆயிரம் ரன்களையும் இவர் குவிதுள்ளார். இருப்பினும் இவரால் இங்கிலாந்து அணிக்கு சர்வதேச அளவில் வெறும் 5 டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாட முடிந்தது.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் – மலி ரிச்சர்ட்ஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆகச்சிறந்த ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடியான பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக ஆரம்பத்தில் கைப்பற்ற இரண்டு உலக கோப்பை தொடர் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார். எதிரணி வீரர்களை இவர் சர்வ அலட்சியமாக பார்ப்பார் என்பதே இவருடைய அதிரடி ஆட்டத்தை காண்பிக்கும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக மிக சிறப்பாக விளையாடி 1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் இவருடைய மகன் மலி தந்தையைப் போல் இல்லாமல் இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார். அண்டர் 19 தொடரில் 319 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் உள்ளூர் தொடர்களில் லிவாட் ஐலன்ட் அணிக்காகவும் கவுண்டி தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காகவும் மிக சிறப்பாக விளையாடினார். இருப்பினும் இவரால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இவரது தந்தை போல் கடைசி வரை விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ரோஜர் பின்னி – ஸ்டூவர்ட் பின்னி

ரோஜர் பின்னி ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரர். குறிப்பாக ஆர்ட்ஸ் 983 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக மிக அற்புதமாக ஓவர்களை வீசி 23 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அதேபோல 1985-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றி பெறுவதற்கும் ரோஜர் பின்னி மிகப்பெரிய அளவில் கைகொடுத்தார்.

அப்பேர்ப்பட்ட ஒரு ஜாம்பவான் வீரரின் மகனான ஸ்டூவர்ட் பின்னி 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் கூட இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் இவர் இந்திய அணியில் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கென் ரூதர்ஃபோர்டு – ஹமிஷ் ரூதர்ஃபோர்டு

நியூசிலாந்து அணிக்காக 1990களில் மிக சிறப்பாக விளையாடிய ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கென் ரூதர்ஃபோர்டு. நட்சத்திர வீரர்கள் மார்ட்டின் குரோவ் மற்றும் ரிச்சர்ட் ஹேட்லி ஓய்வு பெற்றவுடன் இவர் நியூசிலாந்து அணியை மிக சிறப்பாக வழிநடத்தி சில வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். சர்வதேச அளவில் 6 ஆயிரம் ரன்களை நியூசிலாந்து அணிக்காக அடித்துள்ளார்.

இவருடைய மகன் ஹமிஷ் தனது 24 வயதில் நியூசிலாந்து அணிக்காக விளையாடத் தொடங்கினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் பெற்ற இவரால், அதற்கடுத்து 30 இன்னிங்ஸ்களில் மிக சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அதன்காரணமாக அதற்கடுத்து இவருக்கு விளையாடும் வாய்ப்பை நியூஸிலாந்து நிர்வாகம் வழங்கவில்லை.

Published by