“ஸ்மித் சாதாரண பேட்ஸ்மேன் மாதிரி.. கோலி பக்கத்துல இந்த விஷயத்துல வர முடியாது!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி விளக்கம்!

0
564
Smith

நடப்பு உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளை தோற்று இருந்த ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று லக்னோ மைதானத்தில் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மித் மதுசங்காவின் 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார்.

மேலும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக அவர் நல்ல விதத்தில் ஆரம்பித்தாலும் கூட அவரது பேட்டிங்கில் இருக்கும் தடுமாற்றம் வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்தியாவுடன் மெதுவாக ஆரம்பித்து அடித்தளத்தை உருவாக்கி பின்பு அதை பயன்படுத்த முடியாமல் ஆட்டம் இழந்தார். இந்த காரணத்தால் தென் ஆப்பிரிக்க அணியுடன் அதிரடியாக மூன்று பவுண்டரிகள் உடன் துவங்கி, ஆனால் ரபடா பந்தில் எல்பிடபிள்யு ஆனார். அவர் தற்பொழுது சரியான பார்மில் இல்லை.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்த பொழுது, அவர்கள் அவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. டேவிட் வார்னர் தடுமாறி ஆட்டம் இழந்தார் அடுத்து வந்த ஸ்மித் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். அவருக்கு எல்பி டபிள்யு பிரச்சனை இன்னும் முடிவடையவில்லை.

இது அவருக்கு ஒரு பெரிய வீழ்ச்சி என்று நான் கூறவில்லை. ஆனால் இது ஒரு குன்றின் மேல் இருந்து விழுகின்ற அளவுக்கான வீழ்ச்சி. ஏனென்றால் அவர் கண் மற்றும் கைகளின் ஒருங்கிணைவில் விளையாடக் கூடிய வீரர்.

அவரிடம் விராட் கோலிக்கு டெக்னிக்கலாக இருக்கும் வலிமை இல்லை. ஸ்மித் ஒரு சாதாரணமான பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் கூட, அவர் தற்போது ஒரு சாதாரணமான பேட்ஸ்மேன் போலத்தான் தெரிகிறார்!” என்று கூறியிருக்கிறார்!

ஆஸ்திரேலியா அணிக்கு நடப்பு உலக கோப்பை தொடரில் உண்மையான சோதனை அடுத்து பாகிஸ்தான் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகளுடன் விளையாடும் போதுதான் வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!