பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு வேலை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்தால், தற்போது நடைபெற்று இருக்கும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்.
ஆம், ஒருவேளை இந்திய அணி அந்த தொடரை சமன் செய்திருந்தால் ஆஸ்திரேலியாலாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றாலே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்று இருக்கும்.
ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம்:
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இலங்கை மண்ணுக்கு சென்று அவர்களையே ஆஸ்திரேலிய அணி அபாரமாக வீழ்த்திருக்கிறது. முதல் டெஸ்டில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியின் கையே ஓங்கி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 257 ரன்கள் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி 414 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 157 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
கில்கிறிஸ்ட் சாதனை முறியடிப்பு:
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அலெக்ஸ் கேரி ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் 36 வது சதத்தை பூர்த்தி செய்த நிலையில், அவருக்கு உறுதுணையாக நின்று விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி 188 பந்துகளை எதிர் கொண்டு 156 ரன்கள் விளாசினார்.
இதில் 15 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 21 ஆண்டு காலமாக நீடித்த கில்கிறிஸ்ட் சாதனையை அலெக்ஸ் கெரி முறியடித்திருக்கிறார். அதாவது 2003 ஆம் ஆண்டு கில்கிறிஸ்ட் இலங்கை மண்ணில் அதிகபட்சமாக 144 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் தற்போது அலெக்ஸ் கெரி இந்த ரெக்கார்டை முறியடித்து 156 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதன் மூலம் இலங்கை மற்றும் ஆசிய மண்ணில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை அவருக்கு கிடைத்திருக்கிறது.
இது மட்டுமில்லாமல் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிகமாக ரன்கள் அடித்த நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.






