ஐபிஎல் 2024

நான் நல்லா பவுலிங் பண்ண இவங்கதான் காரணம்.. ஆனா இவர்தான் மூளையா இருக்கார் – சிமர்ஜித் சிங் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி வீரர்களின் காயத்தால் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றது. இந்த குறிப்பிட்ட போட்டியில் இந்த சீசனில் முதல் வாய்ப்பை பெற்ற சிமர்ஜித் சிங் தன்னுடைய பந்துவீச்சு வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கு விசா தொடர்பாக தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிய மதிஷா பதிரனா மற்றும் மதிஷா தீக்சனா இருவரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு திரும்பினார்கள். ஆனால் பதிரனா திடீரென காயமடைய தற்பொழுது அவர் இலங்கைக்கு சென்று விட்டார். மேலும் தீபக் சாஹர் நடப்பு ஐபிஎல் தொடரில் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்றுகூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே அணி வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜித் சிங்கை கொண்டு வந்தது. மொத்தம் மூன்று ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் மட்டும் விட்டு தந்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவருடைய பந்து வீச்சு பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது.

மேலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அவரைப் பற்றி பேசி இருந்த பொழுது, அவர் வலைப்பயிற்சியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார் என்றும், அப்படி ஒரு வேகத்தை கொண்டு வருவதற்கு அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை என்றும் பாராட்டி பேசி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பேசிய சிமர்ஜித் சிங் “எங்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் எரிக் சிமன்ஸ் மற்றும் டிவைன் பிராவோ இருவரும் அற்புதமானபயிற்சியாளர்கள். அவர்கள் பந்துவீச்சு குறித்தான எங்களுடைய சிந்தனையையும் முன் வைப்பதற்கான இடத்தை கொடுக்கிறார்கள். மேலும் எரிக் சிமன்ஸ்தான் மூளையாக இருந்து செயல்படுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: தோனியை பத்தி நான் பேச விரும்பல.. இந்த ஒருத்தர் பேசறதுதான் சரியா இருக்கும் – சேவாக் பேட்டி

சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் கூறும்பொழுது ” எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காயம் இருக்கிறது, நாங்கள் விளையாட முடியாத சில வீரர்களும் இருக்கிறார்கள். எனவே நாங்கள் எங்களுடைய பிளேயிங் லெவன் தாண்டி வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இப்படித்தான் சிமர்ஜித் சிங் உள்ளே வந்து என்ன செய்ய முடியும் என்பதை காட்டினார். எங்களுடைய மொத்த அணியும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் நாங்கள் எந்த வீரர்களை எப்போது விளையாட அழைக்கப் போகிறோம் என்று தெரியாது” என்று கூறியிருக்கிறார்.

Published by