இந்திய கிரிக்கெட்

3வது இடம் வாங்கி.. நான் எந்த தவறும் செய்யல.. ஆனா பவுலர இத செய்ய விரும்பறேன் – சுப்மன் கில் பேட்டி

இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவதாக முடிவு எடுத்தது எந்த விதத்திலும் தவறாக அமையவில்லை என இந்திய இளம் வீரர் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்த பொழுது தொடக்க இடத்தில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்கினார். அதற்கு முன்பாகவே அணி நிர்வாகத்தில் சுப்மன் கில் பேசி தாமாகவே மூன்றாவது இடத்தில் விளையாடுவதாக கேட்டு வாய்ப்பை பெற்றுக் கொண்டார். இதனால் இளம் வீரர்கள் இருவருமே அவர்களுக்கான சரியான இடத்தில் விளையாட முடிந்தது.

திடீரென சரிந்த பேட்டிங்

இந்த நிலையில் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் களம் இறங்க ஆரம்பித்த பிறகு அவருக்கு வெற்றிகரமாக இன்னிங்ஸ்கள் அமையவில்லை. இதன் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் என ஆரம்பித்தது. அவர் மூன்றாவது இடத்தில் களம் இறங்க எடுத்த முடிவு தவறாக போனது என கூறப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் கில் டக் அவுட் ஆனார். எனவே அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் கில் நீக்கப்படுவார் என்று நம்பத் தகுந்த செய்திகள் வந்தது. இப்படியான நிலையில் அவர் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து தன்னை நிரூபித்தார். அங்கிருந்து அவர் 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 3 சதம் மற்றும் அரைசதம் என 80 ரன் ஆவரேஜில் விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

எடுத்த முடிவு சரியானது

இதுகுறித்து சுப்மன் கில் கூறும் பொழுது “நான் மூன்றாவது இடத்தில் சரியாக ரன்கள் எடுக்காத பொழுதும் கூட நான் சரியான முடிவை எடுத்ததாகவே உணர்ந்தேன். இது எந்த இடம் என்கின்ற நம்பர் பற்றியது கிடையாது. இது என்னுடைய சொந்த பர்ஃபார்மன்ஸ் பற்றியது”

“மேலும் நான் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சில் எப்படி விளையாடுகிறேன் என்பது சம்பந்தப்பட்டது. நான் மாநில அணிக்கும், இந்திய ஏ அணிக்கும் விளையாடிய பொழுது மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடம் வரை விளையாடி ரன்கள் எடுத்திருக்கிறேன். இதனால் என்னால் ரன்கள் எடுக்க முடியும் என்று நான் எப்பொழுதும் நம்பினேன்”

இதையும் படிங்க : ரோகித் பாய் கிட்ட அதை கேட்டு வாங்கி இருக்கேன்.. இனி இரட்டை சதமும் அடிப்பேன் – ரிஷப் பண்ட் பேட்டி

“மெகதி ஹசன் வந்து வீச்சில் இறங்கி வந்து சிக்ஸர்கள் அடித்தது சிறப்பாக இருந்தது. எப்பொழுதுமே நீங்கள் நிலையாக நின்று இப்படி பந்துவீச்சாளர்களை இறங்கி வந்து எடுத்து பெரிய ஷாட் அடிக்கும் பொழுது அது உங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும். இதை நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shubman Gill