2023ல் ODI கோப்பை மிஸ் செஞ்சோம்.. அதான் பைனல்ஸ்ல இதை செய்யப் போறேன்னு ரோஹித் சொன்னார் – கில் பேட்டி

0
506

நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஆன சுப்மான் கில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற விதம் குறித்தும் ரோஹித் சர்மா குறித்தும் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 270 ரன்களுக்கு மேல் நியூசிலாந்து அணி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அந்த இலக்கை அவர்களால் அடைய முடியவில்லை. இதனால் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா இந்த முறை அதிரடி ஆட்டத்தோடு சேர்த்து நிதான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல விரும்பினார். 83 பந்துகளை எதிர் கொண்ட ரோஹித் சர்மா ஏழு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 76 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த துணை கேப்டன் சுப்மான் கில் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்கு பின்னால் வந்த இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்து சாம்பியன் ஆனது.

- Advertisement -

ரோஹித் குறித்து இந்திய துணை கேப்டன்

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா குறித்து கில் கூறும் போது “பெரும்பாலான நேரம் இந்த தருணத்தில் நினைத்து நான் அற்புதமாக உணர்கிறேன். நான் ஆட்டம் இழந்த பிறகு ஓய்வு எடுத்து ரோகித் சர்மாவின் பேட்டிங்கை ரசித்தேன். ஸ்கோர் போர்டு இடைவெளி எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை, இறுதிவரை பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என ரோஹித் சர்மா என்னிடம் கூறினார். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நாங்கள் தவறவிட்டோம்.

இதையும் படிங்க:எங்க டீம்ல அவருக்கு மன உறுதி ஜாஸ்தி.. எதைக் கண்டும் பயப்பட மாட்டாரு – ரோஹித் சர்மா புகழாரம்

அதற்குப் பின்னர் தற்போது 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து அவர் தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது மற்றும் திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தியது. அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இன்று இரவும் அதை அவர்கள் நிலைத்தன்மையோடு காட்டினார்கள்” என்று கில் பேசி இருக்கிறார்.

- Advertisement -