கேப்டன் மீட்டிங்கில் இம்பேக்ட் பிளேயர் ரூல் பத்தி பேசினோம்.. யாருக்கும் பிடிக்கல.. கடைசில இதுதான் நடக்கும் – சுப்மன் கில் பேட்டி

0
3
Gill

தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து வரும் இம்பேக்ட் பிளேயர் விதியில் தனக்கு விருப்பம் இல்லை என குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.

இந்த விதியின் காரணமாக இரண்டாவதாக பேட்டிங் செய்யக்கூடிய அணிகள் பெரும்பாலும் ஒரு பேட்ஸ்மேனை களம் இறக்கி விடுகின்றன. இதன் காரணமாக போட்டியின் சுவாரசியம் மிகவும் குறைந்து போய் விடுகிறது.

- Advertisement -

இந்த விதி இருக்கக் கூடாது

மேலும் தற்போது ஆல்ரவுண்டர்களுக்கு இந்த விதியால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் கடினமாக உழைத்து மேலே வரும் ஆல்ரவுண்டர்கள் ஐபிஎல் தொடரில் இந்த விதியின் காரணமாக மதிப்பெற்றவர்களாக மாறுகிறார்கள்.

இதுகுறித்து சுப்மன் கில் பேசும் பொழுது “என்னைப் பொறுத்தவரையில் இந்த விதி ஐபிஎல் தொடரில் இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். பொதுவாக கிரிக்கெட் என்பது 11 வீரர்களின் விளையாட்டு. மேலும் நாம் விளையாடும் மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கும் பொழுது, அது விளையாட்டின் திறமையை குறைத்து விடுகிறது”

- Advertisement -

கேப்டன் மீட்டிங்கில் பேசினோம்

“விளையாட்டில் எப்பொழுதும் ஒரு தனித்திறமை தேவைப்படுகிறது. உங்களுக்கு கூடுதலாக விக்கெட் விழும் பொழுது அங்கிருந்து ஸ்கோர் போர்டை நகர்த்திச் செல்வதற்கு, உங்கள் அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு கூடுதல் திறமை தேவைப்படுகிறது”

இதையும் படிங்க: யுவராஜ் சிங் ரிஷப் பண்ட்க்கு இந்த ஸ்பெஷல் பயிற்சி கொடுத்திருக்கிறார்.. என்கிட்ட அவரே இதை சொன்னார் – இர்பான் பதான் தகவல்

“இந்த விதி 2027 ஆம் ஆண்டு வரையில் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இதுகுறித்து நாங்கள் கேப்டன் மீட்டிங்கில் பேசினோம். இந்த விதி போட்டியை கொஞ்சம் சுவாரசியம் ஆக்குகிறது என்பதையும் புரிந்து கொள்கிறோம். ஆனால் கிரிக்கெட் என்பது 11 வீரர்களின் விளையாட்டு. இதில் இறுதி முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் பிசிசிஐதான் இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த விதி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -