கேப்டன் பொறுப்பு அறிவித்த பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் தான் சந்திப்பதாகவும், அவர்கள் தனக்கு அறிவுரை கூறியிருப்பதாகவும் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்கள். இந்த நிலையில் புதிய கேப்டனாக கில் மற்றும் புதிய துணை கேப்டனாக ரிஷப் பண்ட் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இன்று முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
2024 வரலாறு
2024 ஆம் ஆண்டு பெண் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வந்தது. அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் முகமது ஷமி என முக்கிய வீரர்கள் பலர் இடம்பெறவில்லை.
அதே சமயத்தில் இன்றைய கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களை தொடர்ந்து அணிக்கு உள்வாங்கி சிறப்பாக வழி நடத்தி தொடரை ஆச்சரியப்படும் விதமாக நான்குக்கு ஒன்று என வென்றார். எல்லா போட்டியிலும் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தவறாக விளையாடி இங்கிலாந்து தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
விராட் ரோஹித்தை சந்தித்தேன்
இதுகுறித்து கில் பேசும் பொழுது “நான் விராட் பாய் மற்றும் ரோஹித் பாய் இருவரையும் ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும் பொழுது சந்தித்தேன். அவர்கள் இங்கிலாந்தில் தாங்கள் விளையாடிய அனுபவம் குறித்தும் சவால்கள் குறித்தும் என்னிடம் பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து இந்தியா வந்து கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர் நான் ஆடிய சிறந்த டெஸ்ட் தொடர் ஆகும்”
இதையும் படிங்க : பும்ராவுக்கு போட்ட பிளான் வேஸ்ட்.. எதை வெச்சு அவர் விஷயத்துல இந்த முடிவை எடுத்தீங்க – ஆஷிஸ் நெஹ்ரா கேள்வி
“எப்பொழுதும் இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. அந்தத் தொடரில் எப்படி விளையாடினோம் என்பதும் தற்போது இந்தத் தொடர் எப்படி நடக்கும் என்பதும் தொடர்புடையது. அந்த தொடரை நாங்கள் நான்குக்கு ஒன்று என வேண்டும். ஆனால் இங்கிலாந்து கொடுத்த சவால் அடிப்படையில் பார்த்தால் அது நியாயமானது இல்லை. நாங்கள் இந்த தொடரையே பின்பற்றி விளையாட இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






