இந்திய கிரிக்கெட்

தோனி பாய் முதல் நான்கு இந்திய கேப்டன் இருக்காங்க.. நான் ரசித்த கேப்டன் இவர்தான் – சுப்மன் கில் பேச்சு

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என நேற்று கைப்பற்றியது. இந்த அணிக்கு இந்திய இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக தலைமை தாங்கி அணியை சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு குறித்தும் தான் ரசித்த இந்திய கேப்டன் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி விட்ட காரணத்தினால் சுப்மன் கில் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் அவரை எதிர்கால இந்திய அணிகளுக்கான கேப்டனாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் பார்க்கிறது.

இதைத்தொடர்ந்து டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கொடுக்காவிட்டாலும் ரிசர்வ் வீரராக அணியில் தக்கவைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் நேரடியாக கேப்டன் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து அல்லது அவருக்கு முன்பாக கூட கில் கேப்டனாக வரலாம் என்கின்ற பேச்சு அடிபடுகிறது.

சுப்மன் கில் கேப்டன் பொறுப்பு குறித்து பேசும் பொழுது “நீங்கள் தோனி பாய், விராட் பாய், ரோஹித் பாய்,ஹர்திக் பாய் என நான்கு பேரிடமிருந்தும் குணங்களை எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சிறந்த குணங்கள் இருக்கின்றன. ஆனால் நான் ரோகித் பாயின் கீழ் அதிகம் விளையாடியிருக்கிறேன். எனவே ரசித்து விளையாட நான் எதிர்பார்க்கக் கூடிய கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் பொறுப்பு என்பது நிச்சயம் ரசிக்கக்கூடிய ஒன்றுதான். கேப்டன் பொறுப்பு எனக்குள் இருக்கும் சிறந்ததை கொண்டு வரும் என்று நினைக்கிறேன். கேப்டன் பொறுப்பு விளையாட்டில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இது எனக்குள் நான் ரசிக்கும் இன்னொரு பக்கத்தை வெளியில் கொண்டுவர நிச்சயம் உதவி செய்யும்.

இதையும் படிங்க : கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் வர முடியாதா?.. அப்ப கபடி ஆடவும் வராதிங்க.. நியாயமா இருங்க – பிசிசிஐ மீது சல்மான் பட் விமர்சனம்

கேப்டன் பொறுப்பில் அழுத்தம் இருக்கும். ஆனால் அதை கூடுதல் அழுத்தம் என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் கேப்டனாக இல்லாமல் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் போது கூட ஒரு குறிப்பிட்ட அழுத்தம் இருக்கவே செய்யும். இதைத்தான் வேடிக்கையான பகுதியாகவே பார்க்கிறேன். நீங்கள் பலவிதமான உணர்ச்சிகளை உணர்வீர்கள். அதிலிருந்து வெளிவரும் பொழுது கிடைக்கும் திருப்தி உணர்வு சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts