3 சதங்கள், 4 அரைசதங்கள்… கிங் கோலி ரெக்கார்டை காலி பண்ண காத்திருக்கும் சுப்மன் கில்! – அடுத்த போட்டியில் இதை செய்தால் போதுமாம்!

0
4068

மூன்று சதங்கள், நான்கு அரைசதங்கள் உட்பட இந்த சீசனில் 851 ரன்கள் அடித்து பல சாதனை பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருக்கிறார் சுப்மன் கில். இப்படியலில் விராட் கோலியும் இருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்த சீசன் முழுவதும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் சுப்மன் கில். லீக் போட்டிகளில் தொடர்ச்சியான சதம் மற்றும் அரைசதங்கள் அடித்து வரலாறு காணாத ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த ரன்குவிப்பு பிளே-ஆப் சுற்றிலும் நீடிக்கவில்லை.

- Advertisement -

கடைசிக்கு முந்தைய லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சுப்மன் கில் சதம் விலாசி, ஐபிஎல் வரலாற்றில் முதல் சதம் அடித்தார். ஐபிஎல் சதமடித்த முதல் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் எனும் வரலாற்று பட்டியலிலும் இடம்பிடித்தார்.

அடுத்த போட்டியிலிலேயே ஆர்சிபி அணிக்கு எதிராக சதம் விளாசிய கில், ஒரு சீசனில் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்கள் விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். முன்னதாக தவான், விராட் கோலி ஆகியோர் இதனை செய்திருந்தனர். அந்த பட்டியலில் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் சதம் விளாசிய சுப்மன் கில், இந்த சீசனில் அடிக்கும் மூன்றாவது சதமாகும். ஒரு சீசனில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், விராட் கோலி – 2016 ஆம் ஆண்டு நான்கு சதங்கள் அடித்து முதல் இடத்திலும், ஜோஸ் பட்லர் – கடந்த 2022ஆம் ஆண்டு நான்கு சதங்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த சீசனில் இதுவரை மூன்று சதங்கள் அடித்துள்ள சுப்மன் கில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த சீசனில் நான்கு அரைசதங்கள் மற்றும் மூன்று சதங்கள் உட்பட 851 ரன்கள் அடித்துள்ளார் சுப்மன் கில், ஒரு ஐபிஎல் சீசனில் 800 பிளஸ் ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முதலாவதாக 2016ஆம் ஆண்டு விராட் கோலி 973 ரன்கள் அடித்தார். 800+ ரன்கள் கடந்த முதல் இந்திய வீரரும் இவர்தான்.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுப்மன் கில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்திலும் (2016 சீசன்), ஜோஸ் பட்லர் 863 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் (2022 சீசன்), சுப்மன் கில் 851* ரன்களுடன் மூன்றாவது இடத்திலும்(2013 சீசன்) இருக்கின்றனர்.