இரட்டை சதம் குறித்து 47 ஓவர் வரை யோசிக்கவில்லை.. சாதித்தது எப்படி? சுப்மான் கில் பேட்டி

0
2626

சர்வதேச பெருமாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் விலாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நியூசிலாந்துக்குத்தான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர் 149 பந்துகள் 208 ரன்கள் விளாசினார். இதில் 19 பவுண்டர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இந்திய அணி அடித்த 349 ரன்களில் 208 ரன்களை தனி ஆளாக நின்று அடித்த சுப்மான் கில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

இது குறித்து பேசிய சுப்மான் கில், பேட்டிங் செய்யும்போது தம்மை சுற்றி விக்கெட் விழும்போது எல்லாம் அதிரடியாக விளையாடி நியூசிலாந்துக்கு நெருக்கடி செலுத்த வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், நினைத்தபடியே விளையாட முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் சுப்மான் கில் கூறியுள்ளார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கு தகுந்தார் போல் ஆட்டத்தை அமைத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

டாட் பந்துகளை குறைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தை அணுகியதாக குறிப்பிட்ட சுப்மான் கில், இரட்டை சதம் அடிப்பேன் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 47வது ஓவரின் ஒரு சிக்ஸர் அடிக்க முடிந்ததை அடுத்து தான் தம்மால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தோன்றியதாக் கில் கூறியுள்ளார்.

இந்தியாவுக்காக இதைப் போன்று தொடர்ந்து ஆட வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ள சுப்மான் கில், இது போன்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று தருவது மூலம் மனம் நிறைவாக இருப்பதாக கூறியுள்ளார். ஆட்டம் இந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கும் என்று தாம் நினைக்கவில்லை என்று சுப்மான் கில் கூறியுள்ளார். இந்த இரட்டை சதம் மூலம் அவர் உலகக்கோப்பை அணியில் தொடக்க வீரராக தனது இடத்தை உறுதி செய்து உள்ளார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

- Advertisement -