இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்காக, தற்போது இந்திய அணியின் சிறப்பாகச் செயல்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர்களை விட்டு தர முடியாது என இந்திய கேப்டன் சுப்பன் கில் கூறியிருக்கிறார்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வஞ்சி டிராபிகில் மூன்று போட்டிகளில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அவரை தேர்வு செய்யவில்லை.
இந்திய தேர்வுக் குழு தலைவர் அகர்கர் முகமது ஷமியின் உடல் தகுதி குறித்து தமக்கு எந்தவிதமான செய்தியும் வரவில்லை எனவும், அவர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் பதில் அளித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது.
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து பேசி இருந்த முகமது ஷமி தன்னுடைய வேலை விளையாடுவது மட்டுமே யாருக்கும் தன்னுடைய பிட்னஸ் குறித்து அப்டேட் தருவது கிடையாது என வெளிப்படையாகவே தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தான் அவரை தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கும் தேர்வு செய்யவில்லை.
இதுகுறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறும் பொழுது “ஷமி பாய் மாதிரியான ஒரு தரமான பந்துவீச்சாளரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் நீங்கள் ஏற்கனவே அணியில் விளையாடி வரும் மற்ற பந்துவீச்சாளர்கள் குறித்தும் யோசிக்க வேண்டும். அவர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களை விட்டு விட முடியாது”
இதையும் படிங்க : இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்த.. நியூசி வில்லியம்சன் இந்த ஐடியா தந்திருக்கிறார் – டெம்பா பவுமா தகவல்
“அடுத்த தொடர் எப்போது எங்கு விளையாடுகிறோம் என்று நாங்கள் தெளிவாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அப்பொழுதுதான் நாங்கள் அதற்கு தகுந்த வீரர்கள் குறித்து யோசிக்க முடியும். மேலும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் அவர்களுடைய உடல் தகுதி என்ன நிலையில் இருக்கிறது என்பதெல்லாம் இந்திய தேர்வுக்குழு பார்த்துக் கொள்ளும்” என்று கூறியிருக்கிறார்.