கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“29 வயது வீரர்.. எந்த இந்திய அணியிலும் இடம் கிடைக்காது.. இத முடிவு செய்யனும்” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக இந்திய பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மோசமான பேட்டிங் செயல்பாட்டை கொண்டு இருந்தார்கள்.

ஆனால் இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பிய கில் அடுத்து மிகச் சரியாக விளையாடி சதம் அடித்து தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொண்டார்.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பையும் கோட்டை விட்டார். இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோற்பதற்கு கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செயல்பாடும் மிக மோசமாக இருந்ததே காரணம்.

- Advertisement -

இதன் காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அதேபோல் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால் அவர் காயத்தின் காரணமாக இடம் பெறவில்லை என்றே வெளியில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் சில விளையாட்டு பெரிய செய்தி நிறுவனங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வுக்கு தயாராக இருந்தும், அவரை இந்திய தேர்வுக்குழு பரிசீலிக்கவில்லை என கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “ஸ்ரேயாஸ் ஐயர் எந்த வடிவ கிரிக்கெட்டில் நன்கு முயற்சி செய்து சிறப்பாக இருக்கப் போகிறார் என்பது குறித்து அவர் முடிவு செய்ய வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் முக்கியத்துவம் தருவதாக இருந்தால், வேகப்பந்து வீச்சில் பவுன்ஸ் மற்றும் சுழல் பந்துவீச்சுக்கு எதிரான தற்காப்பு முறைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : மூன்றே வார்த்தை.. ஆஸி இளம் படைக்கு பேட் கம்மின்ஸ் அனுப்பிய சூசகமான வாழ்த்து

அவருடைய தற்காப்பு பேட்டிங் முறை சிறப்பாக இருக்கும் பொழுது, அவர் தொடர்ந்து விளையாடுகையில் அவரால் அடித்து விளையாடவும் முடியும். ஆனால் அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்காக அடித்து விளையாட சென்றால் அது சரிவராது” எனக் கூறியிருக்கிறார்.

Published by
Tags: Shreyas Iyer