நான் இப்போ வெற்றியை ருசிக்க அவர் ஒருவரே காரணம்.. இல்லன்னா இது எதுவும் சாத்தியம் இல்லை – ஸ்ரேயாஸ் ஐயர்

0
275

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் டிராபி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் காயத்திலிருந்து மீண்டு வந்த விதம் குறித்து சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் அய்யர் அபாரம்

ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் காயம் காரணமாக அதற்குப் பிறகு இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. மேலும் பிசிசிஐயின் சில அறிவுரைகளை அவர் பின்பற்றாத நிலையில் சம்பள பட்டியலில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அந்த பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்து காயத்திலிருந்தும் குணம் அடைந்து அவர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடினார்.

அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க, அந்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்ரேயாஸ் அதற்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். மிடில் வரிசையில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய அணி சாம்பியனாக முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து மீண்டு வந்த விதம் குறித்து சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இவர்தான் எனக்கு உதவினார்

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் போது ” என்னுடைய பயிற்சி வழக்கத்தை பொறுத்தவரை நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய பயிற்சியில் என்னுடன் இணைந்து செயல்படும் சாகர் என்பவர், களத்தில் எனது செயல்பாடுகளின் அடிப்படையில் எனக்கான அட்டவணையை உருவாக்குகிறார். என் உடலை மாற்றுவதற்கும், பயிற்சி செய்வதற்கும் நான் என்ன செய்கிறேன் என்பதை புரிந்து கொள்வதற்கும் அவர் எனக்கு நிறைய உதவினார்.

இதையும் படிங்க:நான் தப்பா செய்யல.. மகி பாய் செஞ்சதையே செய்றேன்.. அவசியம் இருக்குங்க – ரிஷப் பண்ட் விளக்கம்

ஐபிஎல் தொடரிலும் நிறைய அவர் என்னுடன் பணியாற்றி இருக்கிறார். அதற்கான பெருமைகள் முழுவதும் அவரையே சேரும். அன்றிலிருந்து எனது உடற்தகுதிகள் அடிப்படையில் அவர் சொல்வதைப் பின்பற்றுவதில் நான் உறுதியாக இருந்தேன். அது நன்றாக எனக்கு வேலை செய்தது” என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்த நிலையில் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -