ரோகித் சொன்ன மாதிரி நான் கிடையாது.. எனக்கு அந்த மரியாதை கிடைக்கணும் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
341
Shreyas

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் மிக முக்கிய காரணமாக இருந்து அதிக ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 293 ரன்கள் குவித்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக வந்திருக்கிறார். மேலும் இந்த தொடரில் எல்லா போட்டிகளிலும் மிக முக்கியமான நேரங்களில் ரன்கள் எடுத்த ஒரே வீரராக இருக்கிறார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சத்தம் இல்லாமல் சைலண்டான ஹீரோவாக இருந்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ரோகித் சொன்னது போல் நான் இல்லை

இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “நான் சைலன்ட் ஹீரோவாக வர கிடையாது. நான் முழு மனதுடன் வருகிறேன். எனக்குள் அப்பொழுது ஏதோ ஒன்று நடக்கிறது. குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு எனக்கு என் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை நிராகரிப்புகளையும் தோல்விகளையும் சந்தித்த பிறகு வருகிறது. இவர்கள்தான் சிறந்த ஆசிரியர்கள். இவர்களைவிட உங்களை மேலே வேறு யாராலும் தூக்க முடியாது”

“நான் அங்கீகாரத்தை பற்றி பேசும் பொழுது அது மரியாதை பெறுவதைப் பற்றியது. இது களத்தில் நான் எடுக்கும் முயற்சிகளுக்கான மரியாதை பற்றியது. சில நேரங்களில் இதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது. அதே சமயத்தில் நான் செய்த முயற்சிகளில் முழு திருப்தி அடைகிறேன். ஏனென்றால் துபாய் விக்கெட் பேட்டிங் செய்வதற்கு எளிதானது கிடையாது”

- Advertisement -

இதுதான் மிகவும் முக்கியமானது

“கோப்பையை வெல்வதை விட இங்கு எதுவும் முக்கியமானது இல்லை. உங்களுடைய தனிப்பட்ட மதிப்பெண்கள் எல்லாமே இங்கு இரண்டாம் பட்சம்தான். அணி வெற்றி பெறுகின்ற காரணத்தினால் இந்தியாவில் பல மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களை மைதானங்களிலும் நாங்கள் செல்லும் இடங்களிலும் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்காக போட்டியை வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது”

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயருக்கு அங்கீகாரமே இல்ல.. இவ்வளவு பெரிய ரெக்கார்ட் வைத்தும், பலன் இல்லை.. முகமது கையிப் வேதனை

“குறிப்பாக பவுலர்கள் டைட்டாக பந்து வீசும் போது சிங்கிள்களை எடுப்பது சுலபமான விஷயம் கிடையாது. நான் அப்படியான நேரத்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் எங்கள் பக்கம் வேகத்தை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். அதிர்ஷ்டவசமாக என்னால் அப்படியான வேலையை செய்ய முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -