மும்பைக்கு வேலை ஓவர்.. அடுத்து பஞ்சாபுக்கு ஐபிஎல் கப்.. அவருக்காக வெயிட் பண்றேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
316
Shreyas

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வெல்ல மிகவும் ஆர்வமுடன் காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது பெரிய விலைக்கு 26.75 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வழங்கப்பட்டார். லக்னோ அணிக்காக 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இருக்கிறார்.

- Advertisement -

மிகச் சிறப்பான ஆண்டாக மாறிய 2024

ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இளம் இந்திய கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வென்றது அவரது தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முக்கியமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு உள்நாட்டின் மிகப்பெரிய டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ் மும்பை அணி வென்றது. இந்தியாவின் இரண்டு பெரிய டி20 தொடர்களை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்து வென்று இருக்கிறார். இதே ஆண்டில் அவருக்கு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி மிக அதிகபட்ச விலை கொடுத்து வாங்கியும் இருக்கிறது. எனவே இந்த ஆண்டு அவருக்கு சிறப்பானதாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இது அதிசய உணர்வு

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை வைத்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட்டை வாங்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் முதலாளிகளை சம்மதிக்க வைத்து வாங்க வைத்திருக்கிறார்.

இதுகுறித்து இன்று பேசி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “சையத் முஸ்தாக் அலி தொடரை வென்ற பிறகு அது ஒரு அதிசயமான உணர்வாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு திரைக்குப் பின்னால் நாங்கள் நிறைய கடினமாக உழைத்து இருக்கிறோம். மேலும் எங்கள் அணியின் வீரர்கள் பர்பாமென்ஸ் செய்வதில் சிறப்பாக இருந்தார்கள்”

இதையும் படிங்க : விராட் கம்பீர் செஞ்ச அது ரொம்ப சரியானது.. அதனால இந்தியா தொடரை வெல்லவும் செய்யலாம் – ரவி சாஸ்திரி பேச்சு

“இந்த பகுதியை முடித்துவிட்டு அடுத்து பெரிய விஷயமாக பஞ்சாப் அணிக்கு கோப்பையை வெல்வதற்கு இருக்கிறேன்.அந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியும் அடைகிறேன். மேலும் ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து வேலை செய்யவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -