இந்தியா மாதிரி பாகிஸ்தான் பவுலர்கள் இல்லைன்னு, இங்கிலாந்துக்கு காட்டுங்க – அக்தர் பேட்டி!

0
221

இந்திய பந்துவீச்சாளர்களைப் போல பாகிஸ்தான் பவுலர்கள் இல்லை என்று இங்கிலாந்துக்கு காட்டுங்கள் என அறிவுறுத்தியுள்ளார் முகமது சமி.

மெல்பர்ன் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை மேற்கொள்கின்றன.

- Advertisement -

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பலம்மிக்க அணியாக தெரிகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி ரன்களை கட்டுப்படுத்தி எதிரணியை திணறலுக்கு உண்டாக்குகிறது.

இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்து விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. துவக்க வீரர்கள் இருவரும் சிறந்த பார்மில் இருக்கின்றனர்.

அதே நேரம் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியால் எளிதாக எதிரணியை வீழ்த்த முடிகிறது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணி எப்படி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை பார்ப்போம், பாகிஸ்தானின் பந்துவீச்சு எப்படி என்பதை அவர்களுக்கு காட்டுங்கள் என்று சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார் சோயிப் அக்தர்.

“இங்கிலாந்து அணி அரையிறுதியில் விக்கெட் இழக்காமல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் வந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். இந்த இடத்தில் தான் பாகிஸ்தான் பவுலர்கள் திறம்பட செயல்பட்டு, அவர்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்களைப் போல பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இல்லை என்று புரிய வைக்க வேண்டும்.

இந்த உலக கோப்பைக்கு முன்பு பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரின் பேட்டிங்கை நம்பி பாகிஸ்தான் எந்த நம்பிக்கையில் களமிறங்குகிறது என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அரை இறுதி போட்டிக்கு முன்பு வரை அவர்களின் பங்களிப்பு மிக குறைவாக இருந்திருக்கிறது. மற்ற வீரர்கள் தான் பேட்டிகளில் நன்றாக செயல்பட்டார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

சரியாக அரை இறுதிப் போட்டியில் இவர்கள் மீண்டும் பார்மிற்கு வந்திருப்பது கூடுதல் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. அப்படியே இதை பயன்படுத்தி கோப்பையை வென்று வாருங்கள்” என்றார்.