பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தவறான முடிவுகளை தொடர்ந்து எடுப்பதாகவும், அவர் மிகவும் பலவீனமானவராக இருக்கிறார் எனவும் என சோயப் அக்தர் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்களை களம் இறக்கியதிலும், பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதிலும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தவறுகள் செய்துவிட்டதாக சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசி உள்ள சோயப் அக்தர் கூறும் பொழுது “பாகிஸ்தான் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்று எனக்கு புரியவில்லை. தவறான முடிவுகள் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகின்றன. மிடில் ஆர்டர் சரியாக திட்டமிடப்படவில்லை. பவர் பிளேவும் சரியாக பயன்படுத்தப்படவில்லை”
“மேலும் பவுலர்களையும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. அவர்களிடம் ஒரு ஒருங்கிணைப்பும் இல்லை. மேலும் அவர்களுடைய லைன் மற்றும் லென்த் மிகவும் மோசமாக இருந்தது. ஷாகின் ஒரு பவுன்சர் உடன் ஆரம்பித்தார். அங்கிருந்து விஷயங்கள் தொடர்ந்து மோசமாக ஆரம்பித்து விட்டன”
“சல்மானுக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. அவர் மிகவும் பலவீனமானவராக இருக்கிறார். அவர் விளையாடக்கூடிய இடத்திற்கு அவர் சரியானவராகவும் இல்லை. அந்த இடத்தில் அவர் என்ன செய்கிறார்?”
இதையும் படிங்க : அபிஷேக் பெருசா பண்ண போறார்.. அவர் அடுத்த யுவராஜ் மட்டுமல்ல தோனியும்தான் – அஸ்வின் பேச்சு
“சல்மான் மிகவும் நல்ல பையனாக இருக்கலாம். ஆனால் அவர் திறமையானவராக இல்லை. மிடில் வரிசையில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா போல செயல்படுகிறாரா? இதெல்லாம் விட அவர் தவறான முடிவுகளை எடுப்பதால் அணி தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.