பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசனின் அணித்தேர்வு மிகவும் மோசமான முறையில் மூளை இல்லாமல் இருப்பதாக பாகிஸ்தான் லெஜன்ட் சோயப் அக்தர் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சுற்றுப் போட்டியில் லோயர் மிடில் ஆர்டர் ஹசன் நவாஸ் இடத்திற்கு திடீரென உசைன் தலாத் கொண்டுவரப்பட்டார். அவர் 11 பந்துகளை சந்தித்து விளையாடிய ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதுபற்றி சோயப் அக்தர் பேசும் பொழுது “பாகிஸ்தான் பயிற்சியாளரிடம் அவரது மூளை எங்கே இருக்கிறது? என்று கேட்கப்பட வேண்டும். அவர் அர்த்தமற்ற முறையில் பயிற்சி கொடுத்து, தவறான அணியை தேர்ந்தெடுத்து விளையாட வைக்கிறார். இந்த விஷயங்கள் என் மூளைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. 15 வருடங்கள் கிரிக்கெட் விளையாடி வந்தவனாக இருந்தாலும், இதெல்லாம் எனக்கு புரியாததால் என்னை ஒரு பிராடு போல உணர்கிறேன்”
“கடந்த ஐந்து ஆறு போட்டிகளாக நாங்கள் தொடர்ந்து சரியான அணியை வைத்து விளையாடுங்கள் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம். ஆனால் நீங்கள் இந்திய அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஹூசைன் தலாத்தை கொண்டு வருகிறீர்கள். இந்த யோசனை உங்களுக்கு எங்கிருந்து வந்தது? அவரைக் கொண்டு வருவதால் என்ன பயன்? இதை நீங்கள் சொல்ல வேண்டும்”
“நிச்சயமாக எனக்கு பொறுப்பு கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் எது சரியானதோ அதை மட்டுமே செய்வேன். நான் லாஜிக் தாண்டி எதையும் செய்ய மாட்டேன். மேலும் இது என்னுடைய அதிகாரத்தை பற்றியது கிடையாது. நான் எல்லோருடனும் கலந்து ஆலோசித்து குழுவாக செயல்படுவதில் நம்பிக்கை உடையவர். 20 பேர் கொண்ட தேர்வுக் குழுவை உருவாக்குவேன்”
இதையும் படிங்க : அபிஷேக்க விடுங்க.. திலக் வர்மாவுக்கு ஷாகின் அப்ரிடி வெறும் நெட் ஸ்பின்னர்தான் – கவாஸ்கர் பேச்சு
“நான் இளைஞர் சைம் அயூப்பிடம் தொடர்ந்து தைரியமாக விளையாடுங்கள் என்று சொல்வேன். இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா விளையாடுவதை போல விளையாட அனுமதிப்பேன். நீங்கள் ஆட்டம் இழந்தாலும் தொடர்ந்து வருடம் முழுவதும் விளையாடுவீர்கள் என்று சொல்லுவேன். அந்த நம்பிக்கையை கொடுத்து அவரை முன்னேற்றுவேன். தற்போது அந்தப் பையனை பார்த்தால் பயந்து போயிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.